முதலில் சிக்ஸ் பேக் வைத்தது சூர்யாவா.? சிவகுமார் பேச்சுக்கு விஷால் கொடுத்த பதிலடி

Vishal : சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் நிகழ்ச்சி அண்மையில் நடந்த நிலையில் அதில் சூர்யாவின் தந்தை நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய சிவகுமார் தனது மகன் சூர்யா தான் கடினமான உடற்பயிற்சி மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ் பேக் வைத்துள்ளார். கார்த்தி கூட இதை செய்ததில்லை என்று பெருமையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் அண்மையில் விஷால் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது சூர்யா தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதோடு உங்களது ரசிகர்கள் நீங்கள் தான் 2008இல் முதலில் சிக்ஸ் பேக் வைத்தீர்கள் என்று சொல்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

சிவக்குமார் பேச்சுக்கு பதிலடி கொடுத்த விஷால்

இதற்கு பதில் அளித்த விஷால், முதலில் வெற்றிமாறன் டைரக்சனில் தனுஷ் தான் பொல்லாதவன் படத்தில் சிக்ஸ் பேக் வைத்திருந்தார். அதன்பிறகு 2008 இல் சத்தியம் படத்திலும், அதன் பிறகு 2012 இல் மதகத ராஜா படத்திலும் வைத்தேன் என்று கூறியிருக்கிறார்.

ஆகையால் தனுஷ், விஷால் ஆகியோருக்கு அடுத்தபடியாக தான் சூர்யா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இதனால் சிவக்குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும்படி விஷால் பேசி இருக்கிறார். ஆனாலும் சூர்யா எதிலும் சளைத்தவர் இல்லை.

தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே அடுத்தடுத்த இடத்திற்கு வந்திருக்கிறார். சமீபகாலமாக அவரது படங்கள் சரியாகப் போகவில்லை என்றால் ரெட்ரோ படம் ஒரு கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.