கல்யாண தேதியை அறிவித்த விஷால், சாய் தன்ஷிகா.. குவியும் வாழ்த்துக்கள்

Vishal-Sai Dhanshika: சீக்கிரமே கல்யாணம் என விஷால் சொன்னாலும் சொன்னார். ஒட்டு மொத்த மீடியாக்களும் யார் அந்த பொண்ணு என தேட ஆரம்பித்தனர்.

அது சாய் தன்ஷிகா என கண்டுபிடித்து காலையிலிருந்து செய்திகளும் கசிந்தது. அதேபோல் இன்று யோகிடா இசை வெளியீட்டு விழாவில் இந்த ஜோடியின் திருமண அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி தற்போது மேடையிலேயே தன் காதலை விஷால் அறிவித்துள்ளார். சரியான நேரத்தில் கடவுள் எனக்கானவரை காட்டிவிட்டார்.

விரைவில் எங்களுடைய திருமணம் எனக் கூறினார். அதே போல் திருமணத்திற்கு பிறகும் தன்ஷிகா தொடர்ந்து நடிப்பார் என வெட்கத்தோடு விஷால் கூறினார்.

கல்யாண தேதியை அறிவித்த விஷால், சாய் தன்ஷிகா

அதன் பிறகு பேசிய தன்ஷிகா ஆகஸ்ட் 29 நாங்கள் கல்யாணம் பண்ணிக்க போறோம் என தேதியையும் கூறினார். இது அங்கு இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்.

விஷயத்தை கேள்விப்பட்ட அனைவரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோல் தன்ஷிகா, காலையிலேயே மீடியாவில் இந்த விஷயம் கசிந்து விட்டது.

அதனால் தான் இப்பொழுது சொல்ல வேண்டியதாக போய்விட்டது. இல்லை என்றால் இந்த மேடையை எங்களுக்காக நாங்கள் பயன்படுத்த நினைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

எது எப்படியோ யோகிடா படம் இப்போது இந்த திருமண செய்தியால் கவனம் பெற்றுள்ளது. இது இலவச பிரமோஷனாகவும் மாறிவிட்டது.

நீண்ட காலமாக முரட்டு சிங்கிளாக இருந்தால் விஷால் திருமண பந்தத்தில் இணைவது ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறது. இந்த தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.