புது அவதாரம் எடுக்கும் விஷால்.. தளபதி விஜய்யின் கைராசியால் வந்த விடிவுகாலம்

விஷால் ஒழுங்காக படப்பிடிப்பு வரமாட்டார். இவரால் பட தயாரிப்பாளருக்கு நஷ்டம், யார் சொல்வதும் கேட்க மாட்டார் என்று பல உதாரணங்கள் இருக்கிறது. இதற்கிடையில் பண மோசடி வழக்குகளிலும் சிக்கிக் கொண்டு நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.

இதனால் தற்போது விஷால் நிறைய மாற்றங்களுடன் செயல்படுகிறார். அவருக்கு நிறைய கடன்கள் இருப்பதால் அதை சரி செய்ய, நிறைய படங்களில் ஆர்வமாக நடிக்க தொடங்கியுள்ளார். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை முடித்த கையோடு கார்த்திக் தங்கவேல், ஹரி, பாண்டியராஜ் உள்ளிட்டோரின் படங்களில் நடிக்க விஷால் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் முதலில் கார்த்திக் தங்கவேல் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.

இது சூர்யாவுக்கு சொன்ன கதை, அந்தக் கதையில் இவர் நடிக்க ஆர்வமாக இருந்து தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறார். அதற்கான அறிவிப்பு வெளிவரும். விஷால் இனிமேல் பழைய மாதிரி இருக்க மாட்டார் என்று அவரும் அவரது மேனேஜரும் கூறியுள்ளனர்.

நடிகர் சங்க பொறுப்பு தயாரிப்பாளர், சங்க பொறுப்பு அனைத்தையும் மற்ற நண்பர்களுக்கும் நாசர் அவர்களுக்கும் விட்டுவிட்டு படத்தில் நடிப்பதை மட்டுமே இனிமேல் குறிக்கோளாக செய்யப் போகிறார். இதற்கு முழு காரணம் விஷால் தனது மேனேஜர் மாற்றி புதிய மேனேஜரை வைத்துள்ளார். அவர் விஜய்க்கு மேனேஜராக இருந்தவர். அவரின் வழிகாட்டுதலின்படி அவர் சொல்வதைக் கேட்டு நடந்து வருகிறார் விஷால்.

விஜய்யை எப்படி அவருடைய மேனேஜர் திறன் பட கையாண்டாரோ அதேபோன்று விஷாலையும் அவருடைய மேனேஜர் இனிமேல் சரியாக கையாண்டு, படுத்து கிடக்கும் அவருடைய சினிமா கேரியரை தூக்கி நிறுத்துவார் என்று நம்பப்படுகிறது. ஒரு வழியாய் விஜய்யால் விஷாலுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டது என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.