அண்மை காலமாக விஷால் நடிப்பில் வெளிவரும் படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அவரும் வெற்றி படத்தை கொடுப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்து தான் வருகிறார். ஆனாலும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி திரைப்படம் எதுவும் அமையவில்லை.
விஷால்-ஹரி

அந்த வகையில் எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற திரைப்படங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து தற்போது அவர் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் துப்பறிவாளன் 2 திரைப்படத்தையும் இயக்கி நடித்து வருகிறார்.
ஆனால் மாதக் கணக்கில் இழுத்துக் கொண்டே வரும் அதன் படப்பிடிப்பு எப்பொழுது முடியும் என்பது தான் யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் தோல்வி படங்களால் துவண்டு போய் உள்ள விஷால் தனக்கு இரு வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஹரியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.
விஷால் 34 பூஜை

ஏற்கனவே தாமிரபரணி, பூஜை ஆகிய திரைப்படங்களின் மூலம் ஹிட் அடித்த இந்த கூட்டணி தற்போது மூன்றாம் முறையாக இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷாலின் 34-வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் பூஜை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜீ நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ்-விஷால்-ஹரி

அவர்கள் அனைவரும் சேர்ந்து கலந்து கொண்ட அந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தற்போது பூஜை போடப்பட்டதை அடுத்து நெல்லை மற்றும் காரைக்குடியில் படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கும் பட குழு அதற்கான வேலைகளை துவங்குவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோ
