விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபகாலமாக விஷால் நடிப்பில் படங்கள் பெரிய அளவில் வெளியாகாத நிலையில் லத்தி படத்தின் மீது அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லன் கதாபாத்திரத்தில் விஷால் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களினால் விஜய் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என்று விஷால் கூறியிருந்தார்.
இந்நிலையில் விஜயை அவரது ரசிகர்கள் இளைய தளபதி என்று அழைத்து வருகிறார்கள். இதேபோல் விஷாலையும் புரட்சித்தலைவர் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் ஒருமுறை ரசிகர்கள் கூட்டத்தில் நான் புரட்சி தளபதி இல்லை, தளபதி என்று அழையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
இப்படி வெளியில் வேஷம் போடும் விஷால் பொதுமேடையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருக்கும்போது வித்தியாசமாக பேசுகிறார். அதாவது சமீபத்தில் லத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியிட்ட விழாவில் தளபதி 67 படத்தில் நடிக்க முடியாதை எண்ணி வருந்துவதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவதை பார்த்து பொறாமையாக இருப்பதாகவும் நானும் கண்டிப்பாக விரைவில் விஜயை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று பேசியுள்ளார். விஜய் இல்லாத போது ஒரு மாதிரியாகவும், இப்போது மேடையில் அவரை தாஜா பண்ணும்படி விஷால் பேசி உள்ளார்.
ஆகையால் சமீபகாலமாக விஷால் ஒரு பச்சோந்தியைப் போல நேரத்திற்கு ஏற்றார் போல தனது பேச்சை மாற்றி பேசி வருகிறார். இதனால் இவர் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் ரசிகர்களுக்கு போகிறது. மேலும் விஷால் தனது போக்கை மாற்றி கொள்ளும்படி அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.