அம்புட்டு காசுக்கும் கணக்கு காட்ட சொன்ன உயர்நீதிமன்றம்.. கடும் எச்சரிக்கையால் டப்பா டான்ஸ் ஆடிய விஷால்

Actor Vishal: நடிகர் விஷால் நடிப்பில் இம்மாதம் 15ஆம் தேதி மார்க் ஆண்டனி படம் ரிலீஸாக உள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவான இப்படம் ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக வெளியாகவுள்ளது. இதனிடையே விஷாலால் தற்போது இப்படத்தின் ரிலீசுக்கு பெரிய ஆபத்து வந்துள்ளது.

எப்போதுமே சர்ச்சையுடனே வாழ்ந்து வரும் விஷால், எதையாவது செய்யப்போகிறேன் என் சொல்லி அனைத்தையும் சொதப்புவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம். அந்த அளவுக்கு பண பிரச்சனை, சினிமா பிரச்சனை இவரை தொடர்ந்துக்கொண்டு தான் வரும். உதாரணமாக தயாரிப்பாளர் சங்கம் கட்டிடம் கட்டிய பின்னர் தான் திருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறினார்.

ஆனால் தற்போது கட்டிடமும் கட்டவில்லை, இவர் திருமணமும் செய்துக்கொள்ளாமல் தான் உள்ளார். 46 வயதுடைய விஷால் இனி திருமணம் செய்தால் 60 வது கல்யாணம் தான் என இவரை நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். இருந்தாலும், இதையெல்லாம் கடந்து மீண்டும் படங்களில் ஒழுங்காக நடிக்க வேண்டும் என்று விஷால் கங்கணம் கட்டி இருந்தார்.

ஆனால் அஞ்சிலே வளையாதது ஐம்பதுல வளைந்திடுமா என்ற பழமொழிக்கேற்றார் போல் விஷால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், பண மோசடி போன்ற புகார்களில் சிக்கி தான் வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் நடிக்க விஷால் கமிட்டானார். இப்படத்திற்காக சுமார் 21.29 கோடி ரூபாய் சம்பள பணத்தையும் வாங்கி வாங்கியுள்ளாvர்.

இந்நிலையில் விஷால் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்காமல் பல நாட்கள் டிமிக்கி கொடுத்து வந்தார். இதையறிந்த லைக்கா விஷாலிடம் கொடுத்த காசை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கும் விஷால் அசராமல் இருந்ததால், செம காண்டான லைக்கா விஷால் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தனர். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு பேசிய விஷால், தன்னிடம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அளவுக்கு பணம் இல்லை என்றும் பணம் வந்தவுடன் அவர்களின் கடனை அடைத்து விடுவதாக கூறினார்.

ஆனால் தற்போது வரை விஷால் பணம் கொடுக்க முடியாததையடுத்து, நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் விஷாலின் மொத்த வங்கி கணக்கு விபரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் விஷால் கூறியதற்கு முரணான வங்கி கணக்கு விபரம் இருந்தால், இனி எந்த படங்களிலும் விஷால் நடிக்க முடியாது என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த செய்தியை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.