விஷாலுக்கு தற்போது நேரமே சரியில்லை. எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு பிரச்சினை அவரை பின்தொடர்ந்து வந்து விடுகிறது. இல்லை என்றால் இவரே போய் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வார். அப்படித்தான் இவருக்கும், லைக்கா நிறுவனத்திற்கும் இருக்கும் பிரச்சனை தொடர்கதையாக நீண்டு கொண்டே போகிறது.
பணம் கொடுக்கல், வாங்கலில் ஆரம்பித்த இந்த பிரச்சனை இப்போது நீதிமன்றம் வரை சென்று இருக்கிறது. ஆனாலும் இதற்கான முடிவு தான் இன்னும் கிடைத்த பாடில்லை. அந்த வகையில் லைக்கா நிறுவனத்திற்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வரும் விஷாலுக்கு இப்போது நண்பர்கள் மூலம் ஒரு ஆப்பு கிடைத்திருக்கிறது.
எப்போதுமே நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷால் நடிகர்கள் நந்தா மற்றும் ரமணாவை எப்போதும் தன்னுடனே வைத்திருப்பார். இவர் செல்ல முடியாத இடங்களுக்கு எல்லாம் கூட அவர்களை அனுப்பி வைப்பார். அப்படித்தான் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களின் தயாரிப்பில் நடித்த சம்மதித்திருக்கிறார்.
அதற்காக சம்பளத்தை பற்றி கூட கவலைப்படாமல் சின்னதாய் ஒரு அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட்டு படத்தில் நடித்து கொடுத்தாராம். அப்படி உருவான திரைப்படம் தான் லத்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அந்த நஷ்டத்தை காரணம் காட்டி நந்தா, ரமணா இருவரும் விஷாலிடம் இருந்து வாங்கிய பணத்தை கொடுக்க மறுக்கிறார்களாம்.
அதாவது லத்தி படத்தின் பாதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே பணம் இல்லை என்று அவர்கள் இருவரும் விஷாலிடம் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே குறைவான சம்பளத்திற்கு நடிக்க வந்த அவர் நண்பர்களுக்காக இரண்டு கோடி ரூபாய் வரை பணத்தை ரெடி செய்து கொடுத்திருக்கிறார். அதை வைத்து படத்தை முடித்துவிட்டு சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் என எல்லா இடத்திலிருந்தும் தயாரிப்பாளர்கள் இருவரும் பணத்தை வசூலித்திருக்கிறார்கள்.
இருப்பினும் படத்தின் நஷ்டத்தை காரணம் காட்டி விஷாலுக்கு பணத்தை கொடுக்காமல் அவர்கள் இழுத்தடித்து வருகிறார்களாம். ஆனால் இந்தப் பணவர்த்தனை நடந்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் விஷாலிடம் இருக்கிறது. இருப்பினும் நட்பிற்காக அவர் தற்போது அமைதி காத்து வருகிறாராம். அந்த வகையில் லைக்கா நிறுவனத்தை இவர் டீலில் விட்ட பாவம் தான் நண்பர்கள் மூலம் இவரை திருப்பி அடிக்கிறது என்று பலரும் பேசி வருகின்றனர்.