Vijay sethupathi : துணை நடிகர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இன்று மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இது அவரது கடின உழைப்பால் மட்டுமே சாத்தியமானது.
தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் அறிமுகமாகி, எந்த ஒரு சினிமா பேக்ரவுண்ட்டும் இல்லாமல், இன்று சினிமாவில் சாதித்து காட்டிய ஒரு நடிகர் விஜய் சேதுபதி. இவர் திரையில் வந்தாலே விசில் சத்தம் பறக்கும்.
2012ல் நடுவுல கொஞ்சம் பக்கத்து கானம் திரைப்படத்தில் நகைச்சுவையான தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதிலிருந்து தான் இவருக்கு அதிக ஃபேன்ஸ் கூடி விட்டனர். இதன்பின் பல படங்களில் தன் காமெடி பாணியில் நடித்தார்.
விஜய் சேதுபதி அதே பாணி..
சில வருடங்கள் செல்ல செல்ல அந்த நகைச்சுவையை மறந்து, படங்களில் எதார்த்தமான விஜய் சேதுபதியாக மாறிவிட்டார். நகைச்சுவையான விஜய் சேதுபதி திரையில் பார்த்த மக்களுக்கு வில்லனாகவும், சீரியஸான ஹீரோவாகவும் திரையில் விஜய் சேதுபதியை பார்க்க வேண்டிய சூழல் வந்தது.
தற்போது விஜய் சேதுபதியின் “தலைவன் தலைவி” திரைப்படம் திரையில் பயங்கரமான ஹிட்டை கொடுத்து வருகிறது. பரோட்டா கடையில் வேலை செய்யும் சாதாரண ஒரு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஒரு தலைவனாக இத்திரைப்படத்தில் உருவெடுத்துள்ளார்.
எப்படி தன் பழைய படங்களில் நகைச்சுவையாக நடித்திருப்பாரோ அதே விஜய் சேதுபதி மீண்டும் வந்து விட்டார். தற்போது இந்த தலைவன் தலைவி திரைப்படத்திலும் தனது நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது.