கூலியை மிஞ்சியதா வார் 2.. முதல் நாள் வசூல் விவரம்

War 2 First Day Collection : சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு நேற்றைய தினம் ரஜினியின் கூலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளியானது. கூலி படம் தான் முன்பதிவில் சக்கை போடு போட்டது.

ஆனால் வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்திருப்பதால் தெலுங்கு சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவான வார் 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தனர்.

ஆனால் வார் 2 படத்தில் 40 நிமிடங்கள் கழித்து தான் ஜூனியர் என்டிஆர் அறிமுக காட்சி வந்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.

வார் 2 படத்தின் முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் விஎஃப்எக்ஸ் வேலைகள் சரியாக இல்லை. ஆகையால் மொத்தமாக முதல் நாளில் மட்டும் வார் 2 படம் 52.50 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. குறிப்பாக தெலுங்கில் 23 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

மேலும் ஹிந்தியில் 29 கோடி வசூலை பெற்றிருக்கிறது. குழி படத்தின் போட்டியால் வார் 2 படத்தின் வசூல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கூலி படம் இந்திய அளவில் 65 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

கூலி படமும் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் வார் 2 படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வர வாய்ப்பு இருக்கிறது.