Ilaiyaraaja : சினிமா உலகில் இளையராஜா என்பது வெறும் பெயர் இல்லை. இசை கடவுள் என்று தான் சொல்ல வேண்டும். இளையராஜாவின் இசைக்கு அடிமையாகாதவர் யாருமே இல்லை.
இந்த காலத்தில் ஒரு படத்தில் புதிய பாடலை விட பழைய பாடல் தான் ஜொலிக்கின்றது. புது படங்களில் சில காட்சிகளுக்கு பழைய பாடலை கொண்டு வரும்போது ரசிகர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி தான்.
இளையராஜா சில வருடங்களில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு காப்புரிமை மீறல் காரணமாக வழக்கு தொடுத்து உள்ளார். தனது உரிமை இல்லாமல் எனது இசையை பயன்படுத்தக் கூடாது என்பது அவரது கொள்கை. அதையும் மீறி பயன்படுத்திய படங்களுக்கு அவர் காப்பீட்டு உரிமைத் தொகை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்ணீர் விட்ட வனிதா
முதலில் கூலி திரைப்படத்தில் இளையராஜாவின் மௌன ராகம் திரைப்படத்தின் “வா வெண்ணிலா” பாடலை மாற்றி அமைத்து கூலி திரைப்படத்தில் பயன்படுத்த முயற்சித்தனர். என் அனுமதி இல்லாமல் என் பாட்டை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டார் இளையராஜா. அதன்பின் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் “அந்தி மழை பொழிகிறது” என்ற இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து இளையராஜா லீகல் நோட்டீஸ் அனுப்பினார்.
இப்போது வனிதாவும் சிக்கியுள்ளார். வனிதா இயக்கி நடிக்கும் Mrs & Mr திரைப்படத்தில் சிவராத்திரி பாடல் இடம் பெற்றது. தற்போது அனுமதியில்லாமல் தன் பாடலை பயன்படுத்தியதாக வனிதாவின் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் இளையராஜா.
இந்த செய்தியை கேட்ட அதிர்ந்து போன வனிதா, ” இளையராஜா ஒரு லெஜன்ட் அவரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. மியூசிக்கில் அவர் கடவுள் மாதிரி. கடவுளே நம்மை கோவிக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கும். சின்ன வயசில் இருந்து அவர் வீட்டில் வளர்ந்து இருக்கிறேன்”. இப்படி கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருக்கிறார் வனிதா. இன்னொரு பக்கம் பேட்டியை பார்த்த இணையவாசிகள்” வனிதா அழுவது எல்லாம் நடிப்பு” என்று நக்கல் பேசி வருகின்றனர்.