பா ரஞ்சித் அட்டகத்தி, கபாலி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் உருவான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய காலா திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தை தனுஷ் தன் சொந்த தயாரிப்பில் தயாரித்து இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற அந்த திரைப்படம் தனுஷுக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்று அப்போது பரபரப்பு செய்திகள் வெளியானது.
மேலும் அந்த நஷ்டத்தால் தான் தனுஷ் தன்னுடைய வொண்டர் பார் நிறுவனத்தை மூடியதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என்று இயக்குனர் ரஞ்சித் தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார். படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும் போது கிட்டத்தட்ட 75 சதவிவித லாபம் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ், ஹிந்தி ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் கிடைத்துவிட்டதாம்.
அதனால் இந்த படம் நிச்சயம் தயாரிப்பாளரான தனுசுக்கு லாபத்தை தான் கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் 140 கோடிக்கு தயாரான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 159 கோடி வரை வசூலித்துள்ளது. எப்படி பார்த்தாலும் இந்தப் படம் ஒரு தோல்வி திரைப்படம் என்று யாராலும் கூற முடியாது.
அப்படி இருக்கும்போது தனுஷ் இது தோல்வி படம் என்று வெளிவந்த கருத்துக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என்ற ஒரு கருத்தும் தற்போது எழுந்துள்ளது. மேலும் காலா திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் வடசென்னை, மாரி 2 ஆகிய திரைப்படங்களை தயாரித்து நடித்திருக்கிறார்.
வொண்டர் பார் நிறுவனம் தற்போது இயங்காததற்கு இந்த படங்களின் வசூலும் ஒரு காரணம். அந்த வகையில் ரஞ்சித் தற்போது பல நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதன் மூலம் காலா லாபத்தை கொடுத்துள்ளது என அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.