100 கோடியை தாண்டிய ரெட்ரோ வசூல்.. சூர்யா செய்த விஷயம்

Suriya : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மே ஒன்றாம் தேதி தியேட்டரில் வெளியானது ரெட்ரோ படம். இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. பெரும் நம்பிக்கையில் வெளியான கங்குவா படம் காலை வாரிவிட்டது. இதனால் ரெட்ரோ படத்தை பெரிதும் நம்பியிருந்தார்.

அதேபோல் படம் வெளியான ஒரு வாரத்திற்கு உள்ளாகவே 100 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. ரெட்ரோ படத்திற்கான சக்சஸ் மீட்டும் சமீபத்தில் நடத்தப்பட்டிருந்தது.

ரெட்ரோ லாபத்தில் சூர்யா செய்த விஷயம்

இந்த சூழலில் ரெட்ரோ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் 10 கோடியை சூர்யா தனது அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் வசதி இல்லாத பல மாணவ, மாணவிகளை படிக்க வைத்து வருகிறார்.இதன் மூலம் டாக்டர், இன்ஜினியர் என பலர் நல்ல நிலைமைக்கு சென்று இருக்கின்றனர்.

இப்போது தனது படத்தின் இலாபத்தில் சூர்யா அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜியின் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.