மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அமீர், சில வருடங்களுக்கு முன்பு பெரிய பட்ஜெட் படத்தை கையில் எடுத்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது அமீர் மறுபடியும் அந்த படத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளார். ஆனால் இந்த படம் உருவானால் நிச்சயம் சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கு பெரிய ஆப்பாக மாறிவிடும். ஏனென்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தைப் போன்றே, பழங்கால தமிழ் விளையாட்டான ஜல்லிக்கட்டை பற்றிய படத்தை தான் அமீரும் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஆர்யா மற்றும் அவருடைய தம்பி சத்யா இவர்களுடன் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும் ஆர்யாவிற்கு சமீப கால படங்கள் சரியாக ஓடாமல் கஷ்டப்பட்டு வருகிறார். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு ஆர்யாவை வைத்து இயக்குனர் அமீர் ஒரு படத்தை எடுக்க இருந்தார்.
அமீர், ஆர்யாவை வைத்து எடுத்த படம் சந்தன தேவன். அந்த படத்திற்கு பெரும் பட்ஜெட் தேவைப்பட்டது. அதனால் ஐந்து நாட்கள் சூட்டிங் சென்ற படம் பாதியிலேயே நின்றது. இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்த கதைக்களம். இதுக்கு நிறைய பணம் தேவைப்படும் என்பதால் சரியான இன்வெஸ்ட்டர் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இப்போது அமீர் படத்திற்கு ஏற்பட்ட பண பிரச்சனைகளை தீர்க்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். படம் வேறு சில தயாரிப்பு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான இறுதி ஆவணங்கள் தயாரானதும்
படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளனர்.
பல வருடங்களுக்கு முன் டிராப்பான சந்தன தேவன் படத்தை தூசி தட்டி கையில் எடுத்திருக்கும் அமீர், இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று வெறித்தனமாக இருக்கிறாராம். அதே சமயம் இந்த படம் நிச்சயம் சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கு போட்டியாக மாறும் என்பதால் தற்போது கோலிவுட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.