ரஜினி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் கபாலி படத்தில், ரஜினிக்கு வெறும் மாஸ் காட்சிகள் மட்டுமே இருந்தால் போதும் என்ற அளவுக்கு ஹீரோவுக்கான கதை எழுதி சொதப்பி விட்டதாக, அந்த படத்தை குறித்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனால் அவர்களது பார்வையில் ப்ளாப் ஆன படமாகவே தெரிந்தது. ஆனால் தற்போது அதை மறுத்திருக்கிறார், அந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. கபாலி படம் வெளியான முதல் 6 நாட்களிலேயே 320 கோடி வசூலைத் குவித்ததாக கூறினார்.
தயாரிப்பாளர் எஸ் தாணு, கலைப்புலி பிலிம் இன்டர்நேசனல் மற்றும் வி கிரியேஷன்ஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவன் 1980-களில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகர்கள் பலரது படத்தை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்.
இன்னிலையில் இவருடைய தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான கபாலி படத்தையும் தயாரித்து, தற்போது அந்தப் படமும் வெற்றிப் படம்தான் என வாதிட்டுள்ளார். கபாலி படம் ரஜினியின் கேரியரில் உச்சம் என்றும் இந்தப்படத்தின் கலெக்ஷனை பேப்பரில் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே போட்டு வைத்ததாகவும் கூறினார்.
மேலும் ரஜினி படத்தின் வசூலே வசூல்தான். அவரை மற்ற எந்த நடிகர்களும் தொடவே முடியாது என்றும், கபாலி படமும் அவர் நடித்த படங்களின் வரிசையில் வெற்றிப் படம்தான் என அடித்துக் கூறுகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு .
மேலும் படத்தின் கதை தான் ரஜினிக்கு ஏற்றாற்போல் இல்லை என கருதிய ரசிகர்கள் அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்தினாலேயே மற்ற எதையும் பற்றிக் கவலைப்படாமல் கபாலி படத்திற்கு அமோக ஆதரவை கொடுத்து, உலக அளவில் அதிக வசூலான இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் பெற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.