ஒவ்வொரு இயக்குனருக்கும் ஏதாவது ஒரு சக்சஸ் ஃபார்முலா இருக்கும். அதுவே அவர்களுக்கான சென்டிமென்ட்டாகவும் மாறி பல படங்களின் ஹிட்டுக்கு வழி வகுக்கும். இதை முன்னணி இயக்குனர்களாக இருக்கும் மணிரத்தினம், பாரதிராஜா ஆகியோரும் இப்போது வரை கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் மாரி செல்வராஜும் தன் படங்களில் ஒரு சக்சஸ் ஃபார்முலாவை மறக்காமல் பின்பற்றி வருகிறார்.
தன்னுடைய எதார்த்தமான படைப்புகள் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இவர் தற்போது மாமன்னன் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதில் ஹீரோவை விட வடிவேலுவின் கதாபாத்திரம் தான் ரசிகர்களுக்கான மிகப்பெரிய ட்விஸ்ட் என இயக்குனர் பல பேட்டிகளில் கூறி வருகிறார்.
இதுவே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த நிலையில் சமீபத்தில் வெளியான பாடலும் அனைவரையும் ஆச்சரியம் கொள்ள செய்தது. ஏ ஆர் ரகுமான் இசையில் வடிவேலு பாடியிருந்த அந்த ராசா கண்ணு பாடல், படம் எந்த மாதிரியான ஒரு கதைக்களமாக இருக்கும் என்ற ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.
இந்நிலையில் இப்படம் பற்றிய மற்றொரு தகவலும் காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது. என்னவென்றால் மாரி செல்வராஜ் தன்னுடைய கடந்த படங்களில் ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் பாலோ செய்து வந்தார். அதாவது அவருடைய படம் இறப்பின் மூலமாகத்தான் தொடங்கும். அதாவது பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி என்ற நாய் இறந்து போவதில் இருந்து தான் படம் ஆரம்பிக்கும்.
அதேபோன்று தனுஷ் நடிப்பில் வெற்றி பெற்ற கர்ணன் படத்திலும் அவருடைய தங்கை இறப்பதில் இருந்து தான் கதையே ஆரம்பிக்கும். இது மாரி செல்வராஜின் ஒரு சென்டிமென்ட் ஆக இப்போது வரை இருந்து வருகிறது. அந்த வகையில் மாமன்னன் படமும் வடிவேலுவின் இறப்பிலிருந்து தான் தொடங்குமாம். அதை தொடர்ந்து நகரும் கதை நிச்சயம் யாரும் யூகிக்காத வண்ணம் இருக்கும் என்று பட குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டரில் வடிவேலுவின் லுக் வேற லெவலில் இருந்தது. மேலும் படத்தின் தலைப்பான மாமன்னன் தான் அவருடைய கேரக்டரின் பெயர். இப்படி கதையின் நாயகனாக வரும் வடிவேலுவை நம்பி களத்தில் குதித்துள்ள மாரி செல்வராஜ் இப்படத்தை பெரிதளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய சக்சஸ் ஃபார்முலா பலிக்குமா, மாமன்னன் தல தப்புமா என்ற ஆவல் இப்போது திரை உலகில் ஏற்பட்டுள்ளது.