தேர்தலுக்குப் பிறகும் விஜய் நடிப்பாரா.? வெளியான அதிர்ச்சி தகவல்

Vijay : விஜய்யின் தற்போதைய டார்கெட் 2026 சட்டமன்ற தேர்தல் தான். கடந்த ஆண்டு விஜய் கட்சி தொடங்கிய நிலையில் இப்போது முழு வீச்சில் தனது கட்சி பணிகளை செய்து வருகிறார். அதோடு மாநாடுகளும் நடத்தி வருகிறார்.

அவருடைய மேடைப்பேச்சு பல அரசியல் கட்சியினரை கதிகலங்க செய்து வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் ஜனநாயகன் தான் அவரது கடைசி படம் என்று கூறப்பட்டது. விஜய்யும் அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவில் நடிக்க போவதில்லை என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.

ஆனால் தேர்தலுக்குப் பிறகும் விஜய் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தற்போது ஒரு படத்திற்கு விஜய் 270 கோடி சம்பளம் பெறுகிறார். தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார்.

தேர்தலுக்குப் பிறகு விஜய் சினிமாவில் நடிப்பாரா?

இப்போது ஹெச் வினோத்துடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருக்கிறது. இது தவிர இப்போது தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்கள் இடம் விஜய் கதை கேட்டு வருகிறாராம்.

ஆகையால் எலக்சன் முடிந்த பிறகு மீண்டும் விஜய் படங்களில் நடிப்பார் என கூற விஜய் ரசிகர்களுக்கு அவர் அரசியலில் இறங்குவது மகிழ்ச்சியாக இருந்தாலும், சினிமாவை விட்டு விலகுவது கவலையை ஏற்படுத்தி இருந்தது.

இப்போது இந்த செய்தி அவர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. விஜய்யின் இந்த சினிமா பயணம் தொடர வேண்டும் என்பது தான் பலரது எண்ணமாக இருக்கிறது. ஆகையால் தளபதியின் அடுத்த பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.