80 காலகட்ட சினிமாவை ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பவான்கள் தான் ஆட்சி செய்தனர். அந்த போட்டிகளுக்கு மத்தியில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் அந்த நடிகர். ஆரம்பத்தில் சில அவமானங்களை சந்தித்த அவர் பிற்காலத்தில் டாப் நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.
அவர் வேறு யாருமல்ல ரசிகர்களால் கருப்பழகன் என்று கொண்டாடப்பட்ட நடிகர் முரளி தான். ஆரம்பத்தில் அந்த நிறம் தான் அவருக்கு சில தடைகளை ஏற்படுத்தியது. பல ஹீரோயின்களும் அந்த நிறத்தை பார்த்து அவரை நிராகரித்தனர்.
ஆனாலும் முரளி தன்னுடைய திறமையால் இதயம், பொற்காலம் உள்ளிட்ட சிறந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். திரையுலகில் இவருக்கு நல்ல பெயர் இருந்தாலும் சில தவறான பழக்கங்களால் இவர் அந்த பெயரை கெடுத்துக் கொண்டார்.
அந்த வகையில் இவருக்கு பெண்கள் மற்றும் மதுப்பழக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் அவரால் இருக்கவே முடியாதாம். இதை பற்றி இயக்குனர் வி சேகர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். முரளியை வைத்து நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கும் அவர் ஒரு முறை கொடைக்கானலில் சூட்டிங் நடத்தி இருக்கிறார்.
அதில் நடித்துக் கொண்டிருந்த முரளி திடீரென்று படப்பிடிப்பு தளத்தை விட்டு காணாமல் போயிருக்கிறார். அனைவரும் அவர் எங்கு சென்றார் என்று தேடிக் கொண்டிருக்கும் போது அவர் மும்பையில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. ஏனென்றால் கொடைக்கானலில் அவர் எதிர்பார்த்த வசதிகள் எதுவும் கிடைக்கவில்லையாம்.
அந்த அளவுக்கு அவர் சில பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருந்திருக்கிறார். இதனால் அந்த இயக்குனருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் படத்தை முழுதாக முடித்துக் கொடுக்காமல் முரளி அவரை அலைக்கழித்திருக்கிறார். 80களின் முன்னணி நாயகனாக வலம் வந்த முரளி இப்படி தவறான பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.