உலக அளவில் ஓப்பனிங்கில் அதிர வைத்த 5 படங்கள்.. ஜெயிலரை மிஞ்சிய ஜவான்

Jawan Movie: இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் முதல் நாளில் மட்டுமே மெகா பிளாக்பஸ்டர் என்ட்ரி கொடுத்த திரைப்படங்கள் ஒரு கண்ணோட்டம். உலக எங்கும் இந்திய திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. அப்படி 2023இல் வெளியாகி உலகளவில் முதல் நாள் வசூலில், தூள் கிளப்பிய திரைப்படங்கள் 5 பற்றி பார்க்கலாம்

ஆதி புருஷ்: பிரபாஸ், சைப் அலி கான், கீர்த்தி செனான் , சன்னி சிங் போன்றோர் இணைந்து நடித்த புராணம் சார்ந்த கதை ஆகும். வால்மீகி ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஆதி புருஷ். இதில் சீதையை கடத்திக் கொண்டு சென்ற ராவணனிடம் சென்று ராமன் சீதையை மீட்பதே கதைக்களம் ஆகும். திரைப்படத்திற்கு 500 முதல் 700 கோடி பட்ஜெட் செலவு செய்யப்பட்டது. திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 136.84 கோடியை வசூலை செய்தது. ஆனால் ரசிகர்களால் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

ஜவான்: அட்லி இயக்கத்தில் ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் வெறித்தனமாக வசூலை குவித்துள்ளது. திரைப்படத்தை தயாரிப்பதற்கு 300 கோடி ஆனது. திரைப்படத்தின் 1 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மட்டுமே 125 கோடி தாண்டியது. இதில் ஷாருக்கான் அரசாங்கத்திற்கு எதிராக நீதிகேட்டு போராடக்கூடிய வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் போன்றோர் தமிழ் சினிமாவில் இருந்து இணைந்துள்ளனர்.

பாத்தான்: ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் சித்தாத் ஆனந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பதான். இது 225 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இதில் ஷாருக்கான் ஸ்பை ஏஜென்ட் ஆகவும், வேற லெவல் ஆக்சன் சீக்குவன்ஸ் படமாகவும் எடுத்துள்ளனர். ஷாருக்கானின் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட கூடிய அளவிற்கு இப்படம் அமைந்துள்ளது. திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மட்டுமே 16 கோடியை தாண்டியது.

ஜெயிலர்: இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படமும் அடி தூள் கிளப்பியது. இத்திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஒரு மாஸ் கம்பேக்காக இருந்தது . ஆக்சன் நகைச்சுவை சார்ந்த திரில்லர் திரைப்படம். ஒரு லைன்ல சொல்லணும்னா அப்பா தன் மகனுக்காக எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு எடுத்துக்காட்டு இத்திரைப்படம். இந்த படத்தின் பட்ஜெட் 200 முதல் 240 கோடி ஆகும். திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மட்டுமே உலக அளவில் 95.78 கோடி. ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்த கொண்டாடப்பட்ட திரைப்படம் ஆகும்.

பொன்னியின் செல்வன் 2: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியன் செல்வன் 2 திரைப்படமும் இதில் இடம் பெறும். சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடக்கும் வஞ்சத்தை கதையாக கொண்டு வெளியான திரைப்படம். இதில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா, ஜெயராம், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் பட்ஜெட் 500 கோடி ஆகும். இதன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மட்டும் 61.53 கோடியை வசூலித்தது. ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன் டெத் என்றது போல தான் இப்படத்திற்கு ரசிகர்கள் இடையே கிடைத்த வரவேற்பு ஆகும்.