வடிவேலுவை ஓரங்கட்ட போகும் யோகி பாபு.. மாஸ் கூட்டணியில் உருவாகும் படம்

Vadivelu, Yogibabu: வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கிய நிலையில் இப்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.ஆனால் அதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவரது நடிப்பில் வெளியான மாமன்னன் படம் ஏக போக வரவேற்பை பெற்றது.

அதிலும் குறிப்பாக வடிவேலு நடிப்புதான் பெரிய அளவில் பேசப்பட்டது. பொதுவாக காமெடியில் மட்டுமே கலக்கி வந்த வடிவேலுக்கு மாமன்னன் படம் வேறு பரிமாணத்தை கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் வடிவேலு இல்லாத இடைப்பட்ட காலத்தில் யோகி பாபு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

அதுமட்டுமின்றி கதாநாயகனாகவும் சில படங்களில் யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வடிவேலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் தான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. சிம்பு தேவன் இயக்கத்தில் இப்படம் வெளியானது. இப்போது புதிய படம் ஒன்றை சிம்புதேவன் இயக்க உள்ளாராம்.

ஆனால் வடிவேலு இப்போது தனது படத்தில் நடிக்க சமதிப்பாரா என்ற யோசனையில் யோகி பாபுவிடம் இந்த படத்தின் கதையை கூறியிருக்கிறார். அவருக்கு கதை ரொம்ப பிடித்து போனதால் இந்த படத்தில் நடிக்க உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம். மேலும் இதற்கான முழு கதையையும் இயக்குனர் தயார் செய்து வருகிறாராம்.

இதனால் இனிமேல் வடிவேலுவின் சாம்ராஜ்யத்தை உடைத்து யோகி பாபு காமெடிகள் கனக இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க வடிவேலுக்கு மாமன்னன் படத்திற்கு பிறகு காமெடி கதாபாத்திரங்களை வருவதில்லையாம். தொடர்ந்து சீரியஸான கதாபாத்திரம் அதுவும் கதாநாயகன் வாய்ப்புதான் வந்து கொண்டிருக்கிறதாம்.

ஆகையால் இது போன்ற கதாபாத்திரங்களை வடிவேலு தொடர்ந்து நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். எனவே இனியும் காமெடியில் யோகி பாபு தான் கலக்க இருக்கிறார். மேலும் சிம்பு தேவன் மற்றும் யோகி பாபு படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.