பட விளம்பரத்துக்கு வராத யோகி பாபு.. தயாரிப்பாளருக்கு குட்டு

Yogi Babu : இப்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் காமெடி நடிகராக நடித்த பலரும் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். இதனால் யோகி பாபு பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

அதிலும் சில படங்களில் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனால் பட பிரமோஷன்களில் அவர் கலந்து கொள்வதில்லை. வேதிகா, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் கஜானா படம் உருவாகி இருந்தது. இப்படம் மே 9 திரைக்கு வருகிறது.

இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் யோகி பாபு கலந்து கொள்ளாதது பற்றி தயாரிப்பாளர் ராஜன் கண்டபடி பேசியிருந்தார். அதாவது பணம் கொடுத்தால் தான் யோகி பாபு பிரமோஷனில் கலந்து கொள்பார். நீ நடிகனாக இருக்கவே தகுதி இல்லை என்று கூறியிருந்தார்.

தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த யோகி பாபு

இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இப்போது யோகி பாபு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நிலையில் என்னை பற்றி தவறான தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது தனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

நான் ஏன் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்றால் நிறைய படங்களில் பிசியாக இருக்கிறேன். நான் இதில் கலந்து கொண்டால் அந்த பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திப்பார்கள்.

அதனால் தான் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கஜானா படத்தின் இயக்குனர் பிரபதீஸ், தயாரிப்பாளர் ராஜன் பேசியதற்கும் கஜானா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார்.