சின்னத்திரை நயன்தாராவுடன் ஜோடி சேரும் யோகி பாபு.. மண்டேலாவுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கூறை பிச்சுக்கிட்டு கொட்டுது

Yogibabu: யோகி பாபு சினிமாவுக்கு வந்த புதிதில் கேலி, கிண்டலுக்கு உள்ளானார். இவருடைய தோற்றம் எல்லோரையும் சிரிக்க வைக்கும் படியாக இருந்தது. ஆனால் அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு காமெடியில் கலக்க ஆரம்பித்தார் யோகி பாபு. அந்த சமயத்தில் காமெடி நடிகர்கள் எல்லோரும் ஹீரோ மோகத்தில் இருந்தனர்.

சைடு கேப்பில் இறங்கிய யோகி பாபு டாப் நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு இவருக்குமே ஹீரோ வாய்ப்பு வந்தது. அதன்படி மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதற்கு ஒரு படி மேலாக நயன்தாராவை ரூட் விடுபவராக கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார்.

தவமாய் தவம் கிடைக்கும் பெரிய நடிகர்களுக்கு கூட நயன்தாரா படத்தில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் அசால்டாக யோகி பாபு நடித்து விட்டார். இப்படி சொல்லிக்கொண்டே இருக்கும் வேலையில் இப்போது சின்னத்திரை நயன்தாராவுடன் ஜோடி போட்டு இருக்கிறார் யோகி பாபு. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் யோகி பாபு பட்டையை கிளப்பி இருந்தார்.

இந்நிலையில் இன்று வாணி போஜன் படத்தின் பூஜை ஒன்று போடப்பட்டது. எஸ் ஜே சூர்யாவின் பொம்மை படத்தை இயக்கிய ராதா மோகன் இந்த படத்தை இயக்குகிறார். ஐசரி கணேசன் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் உடன் இணைந்த டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சமீபகாலமாக வாணி போஜனுக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. மேலும் விக்ரமுக்கு ஜோடியாக மகான் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியான போது இவர் நடித்த காட்சிகளை இடம்பெறவில்லை. இவ்வாறு தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் வாணி போஜன் யோகி பாபு உடன் இணைந்து இருக்கிறார்.

யோகி பாபு தொட்டதெல்லாம் இப்போது பொன்னாகி வருகிறது. ஆகையால் வாணி போஜனுக்கும் இந்த படத்திற்கு பிறகு பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். அது எந்த அளவுக்கு கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இப்படத்தில் அப்டேட் விரைவில் வெளியாக இருக்கிறது.