உருவ கேலி கிண்டலுக்கு மத்தியில் சாதித்த யோகி பாபு.. இத்தனை கோடி சொத்து மதிப்பா?

யோகி பாபு நடிப்பில் கடைசியாக வெளியான படம் கங்குவா. இப்படத்தில் முதல் 30 நிமிட சீன்களில் அவர் காமெடி செய்திருந்தார். அது ஒர்க் அவுட் ஆகவில்லை என சினிமா விமர்சகர்கள் கூறினர்.

ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் குழந்தைகள் முன்னேற்ற கழகம், சுமோ, மலை, ஜகஜால கில்லாடி, கோல்மால் படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்கள் 2025 ஆம் ஆண்டு ரிலீஸாகவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் காட்டில் அடைமழை தான்.

அவரது கைவசத்தில், சலூன், வீரப்பனின் கஜானா, மண்ணாங்கட்டி, மெடிக்கல் மிராக்கல், சைத்தான் கா பச்சா, பெரியாண்டவர் போன்ற படங்கள் உள்ளன.

உழைப்பால் சாதித்த யோகி பாபு

இதுபோக, ஜெயிலர் 2 -ல் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ரஜினி பிறந்தநாளில் இப்பட அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தொடர்ந்து முன்னடி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. ஒரு படத்தில் நடிக்க 5 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள். ஏற்கனவே சென்னையில் பிரமாண்டமாக வீடு கட்டினார் யோகி பாபு.

தமிழில் முன்னணி காமெடி நடிகராவும் வலம் வருகிறார். இவரது சொத்து மதிப்பு 85 கோடி வரை இருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

Leave a Comment