இந்த நடிகையுடன் நீங்க நடிக்கக் கூடாது.. சூர்யாவை வெளுத்து வாங்கிய ஜோதிகா

சூர்யா, ஜோதிகா இருவரும் ஒரு சிறந்த நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் ஜோதிகாவின் ஆலோசனை இடம்பெருமாம். சமீபத்தில் கூட சூர்யா சூரரைப்போற்று படத்திற்காக தேசிய விருது வாங்கினார்.

அப்போது பேசிய சூர்யா சூரரைப் போற்று படத்தின் கதையை முதலில் ஜோதிகா படித்துவிட்டு இந்த படத்தை கண்டிப்பாக பண்ண வேண்டும் என கூறியதாக சொல்லி இருந்தார். இவ்வாறு சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த பல படங்களில் ஜோதிகாவின் ஆலோசனை இருந்துள்ளது.

Also Read :சூர்யா தவறவிட்ட 5 ஹிட் படங்கள்.. கைநழுவிப்போன ராஜமவுலியின் பட வாய்ப்பு

இந்த சூழலில் ஒரு நடிகை கூட நடிக்கவே கூடாது என சூர்யாவிடம் ஜோதிகா கூறி உள்ளாராம். ஏனென்றால் அந்த நடிகை நடித்த எல்லா படமுமே தொடர் தோல்வியை சந்தித்து வந்ததால் ஒரு ராசி இல்லாத நடிகை என்று அவர் மீது முத்திரை குத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நடிகையுடன் ஜோடி போட்ட நடிக்க வேண்டாம் என சூர்யாவுக்கு ஜோதிகா கட்டளையிட்டுள்ளார்.

அதாவது சமந்தா உடன் தான் ஜோதிகா சூர்யாவை நடிக்கக் கூடாது என கூறியுள்ளார். ஏனென்றால் அப்போது சமந்தா நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது. ஆனால் ஜோதிகாவின் பேச்சை மீறு சூர்யா சமந்தாவுடன் ஜோடி போட்டு நடித்தார்.

Also Read :சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த 6 படங்கள்.. தேசிய விருதை பெற்று தந்த சூரரைப் போற்று

அஞ்சான் படத்தில் தான் இவர்கள் ஜோடியாக நடித்திருந்தார்கள். ஜோதிகா சொன்ன மாதிரியே அஞ்சான் படம் படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது. இதனால் ஜோதிகா கணிப்பு எப்போதுமே தப்பாகாது என்பது போல கூறி வந்தார்கள்.

ஆனால் அதே சமயத்தில் சமந்தா விஜயுடன் சேர்ந்து கத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் சமந்தா ராசி இல்லாத நடிகை என்று சொன்னதற்கு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து உள்ளார் என அவரது ரசிகர்கள் பெருமையாக பேசி வந்தனர்.

Also Read :நிற்க கூட நேரமில்லாமல் கொடிகட்டி பறந்த சமந்தா.. மார்க்கெட் சரியா இதுதான் காரணம்