Atlee’s decision: அட்லி இயக்கும் படம் என்ன தான் காபி கதையாக இருந்தாலும் வசூல் அளவில் ஜாக்பாட் அடித்து விடும். இதை தான் அனைத்து ஹீரோக்களும் விரும்புகிறார்கள். அதனாலயே அட்லிக்கு மிகப்பெரிய வரவேற்பு அனைத்து பக்கங்களிலும் கிடைத்து வருகிறது. கிட்டத்தட்ட எடுத்து ஐந்து படங்கள் மூலம் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை இவரது புகழ் பறக்க ஆரம்பித்து விட்டது.
முக்கியமாக கடந்த வருடம் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஜவான் படத்தை எடுத்து 1000 கோடி வசூலை பெற்றுவிட்டது. அதனால் தற்போது ஹாலிவுட் கிரியேட்டிவ் அலைன்ஸ் நடத்தும் ஆஸ்ட்ரா அவார்ட்ஸ் விருதுக்கு அட்லியின் ஜவான் படம் மட்டுமே இந்தியாவில் இருந்து நாமினேட் ஆகியிருக்கிறது. அதனால் இன்னுமே இவருடைய மார்க்கெட் ரேஞ்ச் அதிகரித்துவிட்டது.
இதற்கு இடையில் அட்லி எப்படியாவது விஜய்க்கு ஒரு படத்தை எடுத்து விட வேண்டும் என்று கதையை தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் விஜய் அரசியலில் நுழைந்ததால் தற்போது இவருடைய முழு கவனத்தையும் அதன் மேல் செலுத்தி வருகிறார். அதனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு கடைசியாக 69 ஆவது படத்தை நடித்து முடிக்கலாம் என்று தீர்மானத்திருக்கிறார்.
அதனால் அதற்கான இயக்குனரை மட்டும் தேடும் முயற்சியில் இறங்கிவிட்டார். இப்படி விஜய் எடுத்த முடிவால் தற்போது அட்லி ரொம்பவே நொந்து போய்விட்டார். அதனால் இனியும் அண்ணன் விஜய்யை நம்பி பிரயோஜனம் இல்லை என்று பாலிவுட் பக்கமே பெட்டி படுக்கையை எடுத்துக்கிட்டு போய்விட்டார். ஏற்கனவே அங்கே ஜவான் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் அனைத்து ஹீரோக்களின் கண்ணும் இவர் மீது தான் திரும்பி இருக்கிறது.
அதனால் பாலிவுட் ஹீரோ சல்மான் கானிடம் தஞ்சம் அடைந்து விட்டார். இவரிடம் அட்லி கதை சொல்லி ஓகேயும் பண்ணிவிட்டார். அதனால் கூடிய விரைவில் இவர்களுடைய படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அந்த வகையில் சல்மான் கான் அடுத்ததாக மற்றொரு மாஸ் ஹீரோவும் இவரை வலை விரித்து தேடி வருவதால் இப்போதைக்கு அட்லி மும்பையிலேயே செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவு எடுத்து விட்டார்.
இனி அட்லி கோலிவுட்டில் பார்ப்பதை விட பாலிவுட் நடிகர்களை வைத்து அதிகம் படத்தை இயக்கப் போவதை பார்க்கலாம். இவருடைய கேரியர் ஆரம்பித்தது என்னமோ இங்கே தான் ஆனால் தொடர்ந்து படங்களை கொடுத்து வசூல் ரீதியாக வெற்றி கொடுப்பது பாலிவுட் நடிகர்களுக்கு.