ரஜினி பட வாய்ப்பு கைக்கு வருவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும் போல.. புலம்பித் தவிக்கும் இளம் இயக்குனர்

கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளங்களில் ரஜினியின் படத்தை அடுத்து இயக்கப்போவது இந்த இயக்குனர் தான் என தொடர்ந்து வந்த வதந்தியால் அந்த இயக்குனர் மிகவும் மனம் நொந்துபோய் காணப்படுகிறாராம்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பட வாய்ப்பு கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்த போது தான் சூர்யா படத்தையும் பொருட்படுத்தாமல் நேராக அண்ணாத்த படத்தை இயக்கி கொடுத்தார் சிறுத்தை சிவா.

தற்போது அண்ணாத்த திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட்டு, மேலும் ஒரு வாரம் ஹைதராபாத்தில் தங்கி அண்ணாத்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.

இதற்கிடையில் ரஜினி முடிந்தவரை சீக்கிரம் பல படங்களில் நடித்து விட வேண்டும் என முடிவு செய்துள்ளார். அந்தவகையில் அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இது தேசிய பெரியசாமிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ரஜினி கதை கேட்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை எனவும், ஆனால் தற்போது வரை நான் கதை தயார் செய்யவில்லை, வருங்காலத்தில் அது நடந்தால் நானே அதை அறிவிப்பேன் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதிலிருந்தே ரஜினி பட வாய்ப்பு கைக்கு வருவதற்குள் அதை வதந்திகள் மூலம் கெடுத்து விடுவார்கள் போல என பயந்துபோய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாராம் தேசிங்கு பெரியசாமி.

rajini-desingh-periyasamy
rajini-desingh-periyasamy