இறப்பிற்குப் பின் நிறைவேறிய ஆசை.. சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலரில் நடித்துள்ள ஜீ தமிழ் பிரபலம்

Actor Rajini: தற்போது எங்கு திரும்பினாலும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பற்றிய பேச்சு தான் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. சிறு இடைவெளிக்கு பிறகு தலைவரின் தரிசனம் படு மாசாக இருந்ததில் குஷியான ரசிகர்கள் இப்போது படத்தை வேற லெவலில் கொண்டாடி வருகின்றர்.

அது மட்டுமல்லாமல் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை நெருங்கி கெத்து காட்டி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர். இந்நிலையில் ஜீ தமிழ் பிரபலம் ஒருவரின் ஆசை ஜெயிலர் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஆனால் அதை பார்க்கத்தான் அவர் இன்று உயிரோடு இல்லை.

அந்த வகையில் சோசியல் மீடியாக்களில் தன்னுடைய அசத்தல் நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் தான் டான்சர் ரமேஷ். இதன் மூலம் ஜீ தமிழ் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியையே தன் நடனத்ததால் தூக்கி நிறுத்தினார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிய திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அஜித்தின் துணிவு படத்தில் சிறு கேரக்டரில் நடித்திருந்த இவர் ஜெயிலர் படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பே அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது தான் பரிதாபம்.

இதைப் பற்றி குறிப்பிடும் அவருடைய குடும்பத்தினர் ரமேஷ் மற்றும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார் என்று கண்கலங்கி வருகின்றனர். ஏனென்றால் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கிறோம் என்று அவர் அவ்வளவு சந்தோஷப்பட்டாராம்.

ஆனால் அதைக் கூட பார்க்க முடியாமல் அவர் மரணித்து விட்டார். இதுதான் இப்போது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது. ரமேஷ் அவசரப்படாமல் இருந்திருந்தால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர். அந்த வகையில் இறந்த பிறகு அவருடைய ஆசை ஜெயிலர் மூலம் நிறைவேறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.