Psycho Movie: ஒரே மாதிரியான படங்களை பார்த்து போரடிக்கிறது என்று மக்கள் புலம்பி தவித்து வந்த நிலையில் சைக்கோ மாதிரி திரில்லர் ஆன படங்களும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சைக்கோ படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி அடைந்திருக்கிறது. அந்தப் படங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
போர் தொழில்: இந்த வருடம் ஜூன் மாதம் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் போர் தொழில் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா மற்றும் சரத் பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதுவரை வெளிவந்த கிரைம் படங்களை மறக்கடிக்கும் வகையில் இப்படம் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. எந்த தடயமும் இன்றி ஒரு பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவதை கண்டுபிடிக்கும் விதமாக இக்கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும். அத்துடன் இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.
Also read: விஷ்ணு விஷாலின் கேரியரை தக்க வைத்த 5 படங்கள்.. சைக்கோவை குறிவைத்து பிடித்த ராட்சசன்
கலைஞன்: ஜிபி விஜய் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு கலைஞன் திரைப்படம் வெளிவந்தது. இதில் , பிந்தியா, சிவரஞ்சனி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் திடீரென்று மர்மமான முறையில் வரிசையாக கொலை நடந்து வரும். அந்த கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் கமல் மீது அனைத்து புகார்களும் திரும்பும். யார் தான் அந்த கொலையாளி என்று பார்ப்பவர்களை பதப்பதைக்க வைக்கும் அளவிற்கு ரொம்பவே திரில்லர் படமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் 100 நாட்களுக்கும் மேல் திரையரங்களில் ஓடி வசூல் சாதனை படைத்த படமாகும்.
வேட்டையாடு விளையாடு: 2006 ஆம் ஆண்டு கௌதம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படம் கிரைம் ஆக்சன் திரில்லர் படமாக வெளிவந்து மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. கிட்டத்தட்ட 500 மில்லியன் வசூலை பெற்று சென்னையில் மட்டும் 16 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமை இப்படத்திற்கே கிடைத்திருக்கிறது. இப்படத்தில் பெண்களை துன்புறுத்தி வன்கொடுமைக்கு ஆளாகி மர்மமான முறையில் கொலை செய்யும் இரண்டு சைக்கோ வில்லன்களை கண்டுபிடிக்கும் ராகவன் கதாபாத்திரத்தில் போலீஸ் கேரக்டரில் கமல் நடித்திருப்பார்.
Also read: 40 வயதில் புளியங்கொம்பை பிடித்திருக்கும் சிம்பு.. விரைவில் நடக்க உள்ள திருமணம்
மன்மதன்: ஏஜே முருகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு மன்மதன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிம்பு, ஜோதிகா, கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஆண்களை ஏமாற்றும் பெண்களை கொலை செய்யும் சைக்கோ திரில்லர் கேரக்டரில் மன்மதன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருப்பார். இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 150 நாட்களுக்கும் மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
சைக்கோ: மிஸ்கின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளிவந்தது. இதில் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது பெண்களை கடத்தி கொடூரமான முறையில் அவர்களை கட்டிப்போட்டு கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
Also read: உதயநிதியை மறைமுகமாக வறுத்தெடுத்த விஷால்.. எங்கேயோ செமத்தயா வாங்கி இருப்பார் போல
இறைவன்: கடந்த இரு தினங்களுக்கு முன்பு அகமது இயக்கத்தில் இறைவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெயம் ரவி, நயன்தாரா, விஜயலட்சுமி, நரேன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதற்கு முன்னதாக வெளிவந்த சீரியல் கில்லர் திரைப்படங்கள் போலவே இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. அதாவது சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யும் கொலையாளியை கண்டுபிடிக்கும் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருப்பார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் ஜெயம் ரவி நடித்த படத்திலேயே இதுதான் மிக மொக்கையான படமாக அமைந்திருக்கிறது.
ராட்சசன்: திரில்லர் படம் என்றாலே தற்போது நம்முடைய ஞாபகத்துக்கு முதலில் வருவது ராட்சசன் படம் தான். அந்த அளவிற்கு இப்படம் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து மாபெரும் வெற்றியை பார்த்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் திரில்லர் படமாக வெளிவந்தது. இப்படத்தில் மர்மமாக கொலை செய்யும் கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பார். அத்துடன் இப்படத்தை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும் அதிக எதிர்பார்ப்புகளுடன் கதைகளும் அமைந்து ஹாரர் திரில்லர் படமாக வெற்றி பெற்றிருக்கிறது.