Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கதாநாயகிக்கான தகுதி இல்லை.. தவறான விமர்சனத்திற்கு நேக்கா பதிலடி கொடுத்த அனுபமா

கதாநாயகிக்கான தகுதி இல்லை.. தவறான விமர்சனத்திற்கு நேக்கா பதிலடி கொடுத்த அனுபமா

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் கதாநாயகிக்கான தகுதி பெறவில்லை என விமர்சித்துள்ளார்.

 Actress Anupama: மலையாள படமான பிரேமம் படத்தில் அறிமுகமானவர் தான் அனுபமா பரமேஸ்வரன். மேலும் தமிழில் சில படங்களே நடித்துள்ள நிலையில், இவர் கதாநாயகிக்கான தகுதி இல்லை என விமர்சனம் செய்தவருக்கு பதிலடி கொடுத்து பரபரப்பை உண்டு படுத்து உள்ளார்.

2016ல் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் கொடி. இப்படத்தில் தனுஷ், திரிஷா, அனுபாமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்த நிலையில், 2021ல் தள்ளி போகாதே என்னும் படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்தார்.

இவருக்கு தமிழில் வாய்ப்புகள் சரிவர இல்லாததால் தெலுங்கு, மலையாள படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறிய இவர் தற்பொழுது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

அதைத்தொடர்ந்து ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள இது போன்ற கவர்ச்சி நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். தெலுங்கு, மலையாள படங்களில் இவருக்கு என்று ரசிகர்கள் இருக்கும் நிலையில், தற்பொழுது பட வாய்ப்புக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஒரு சில பிரபலங்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், பல படங்களில் பிரபலமாகாத நடிகர்களுடன் தான் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் ஒன்றும் பெரிய கதாநாயகி இல்லை. அதனால் பிரமாண்டமான பிரபலங்களோடு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் கதாநாயகிக்கான தகுதி பெறவில்லை என விமர்சித்துள்ளார். அதற்கு பதிலடியாக ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் நான் கதாநாயகி அல்ல நான் நடிகை ரகம் என நேக்காக பதிலடி கொடுத்துள்ளார். இவரின் இத்தகைய புத்திசாலித்தனமான பதில் பலரின் பாராட்டை பெற்று தந்தது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.