மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வரலாற்று நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றுவதற்கு பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டது.
அந்த வகையில் அமேசான் நிறுவனம் பொன்னியின் செல்வன் ஓ டி டி உரிமையை பல கோடிகள் கொடுத்து கைப்பற்றியுள்ளது. வேறு எந்த ஓடிடி நிறுவனமும் இதுவரை இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து எந்த திரைப்படத்தையும் வாங்கியது கிடையாது.
அதன் அடிப்படையில் அமேசான் நிறுவனம் பொன்னியின் செல்வன் உரிமையை 120 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தொகை இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இப்படத்தின் லாபம் மட்டுமே 700 கோடி ரூபாயை தாண்டும் என்று கணிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மணிரத்தினம் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் படத்தின் ரிலீசுக்கு முன்பே இவ்வளவு பெரிய லாபத்தை பார்த்துள்ளனர். தற்போது படத்தின் பிரமோஷனும் அமோகமாக துவங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவலை தூண்டி வருகிறது.
அந்த வகையில் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தின் பெயரை ட்விட்டர் தளத்தில் மாற்றி படத்தை விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த புது முயற்சி தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இப்படி எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வனின் வசூல் வேட்டையை காண திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
Also read: பொன்னியின் செல்வன் விழாவில் சேட்டை செய்த சித்தார்த்.. அரங்கத்தை திரும்பிப் பார்க்க வைத்த திரிஷா