கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக போட்ட உழைப்பு அத்தனையுமே அப்போது வீணாகிவிட்டது.
ஆனால் இப்போது அந்த படத்தின் அருமையை உணர்ந்த ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். தற்போது அனைத்து திரையரங்குகளிலும் ஆயிரத்தில் ஒருவன் படம் பத்து வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் ஆனது.
கார்த்திக்கு பிறகு இந்த படத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக ரசிகர்கள் மத்தியில் சோழ மன்னனாக வாழ்ந்து காட்டியவர் பார்த்திபன். இவருக்கும் பாராட்டு காலம் கடந்து கிடைத்துள்ளது.
ஆனால் முதன் முதலில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் சோழ மன்னனாக நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் தனுஷ் தானாம். இதனை செல்வராகவன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சோழ மன்னனுக்கு ஏற்ற உடல் பாவனை தனுஸுக்கு இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.
அசுரன் படத்தை வைத்து பார்க்கும்போது முடிந்த அளவுக்கு சோழ மன்னனாக தன்னுடைய நடிப்பை பிரமாதமாக கொடுத்திருப்பார். இருந்தாலும் பார்த்திபனுக்கு பிறகு சோழ மன்னனாக வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பார்த்திபனும் சிறப்பாக நடித்திருந்தார்.
சோழ மன்னனாக பார்த்திபன் தேர்வு சரியா? அல்லது தனுஷ் தேர்வு சரியா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.