
காமெடியனாக இருந்த சூரி இப்போது ஹீரோவாக ப்ரமோஷன் ஆகிவிட்டார்.

விடுதலை, கருடன், கொட்டுக்காளி என அவருடைய ரேஞ்ச் வேற லெவலில் மாறிவிட்டது.

அந்த வரிசையில் தற்போது அவர் மாமன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரிக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் புகழ் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

இவர்களுடன் ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், ஸ்வாசிகா, பாபா பாஸ்கர் என பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

மே 16ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.