தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே மலையாளத்திலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். ஆனால் சமீபத்தில் கவினுக்கு கதாநாயகியாக டாடா படத்தில் நடித்ததின் மூலம் அபர்ணாதாஸ் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் வசூலிலும் சக்கை போடு போட்டது. இப்போது அபர்ணா தாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட்களை பதிவிட்டு கலக்கி கொண்டிருக்கிறார்.
டிரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை அபர்ணா தாஸ்

அதிலும் வெள்ளை டிரான்ஸ்பரென்ட் சேலையில் தேவதை போல் இருக்கும் அபர்ணாவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இப்போது இருக்கும் கதாநாயகிகள் எல்லாம் கவர்ச்சியை காட்டினால் தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என கண் கூசும் அளவுக்கு போட்டோ ஷூட் நடத்துகின்றனர்.
தேவதை போல் இருக்கும் அபர்ணா

அந்த வகையில் இப்போது அபர்ணாவும் ஓரளவு கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவிடுவதன் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று, இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். இதைப் புரிந்து கொண்ட ரசிகர்களும் டாடா படம் போன்ற நல்ல படத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுகின்றனர்.
டிரான்ஸ்பரென்ட் உடையில் டாடா படத்தின் கதாநாயகி
