விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா. இவர் சின்னத்திரை தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செந்தூரப்பூவே, மின்னலே போன்ற தொடர்களில் தர்ஷா குப்தா நடித்திருந்தார்.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படங்கள் சரியாக போகாததால் அதன்பின்பு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராமல் போனது.
அச்சு அசல் சீதா போலவே இருக்கும் தர்ஷா குப்தா

இதனால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏராளமானோர் ஃபாலோ செய்கின்றனர். இந்த புகைப்படங்கள் ஏதாவது இயக்குனர்களின் கண்களில் பட்டு படவாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தர்ஷா குப்தா இவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக சிலர் கூறி வருகின்றனர்.
ஆற்றில் நீர் எடுக்கும் தர்ஷா

தற்போது சீதா கோலத்தில் ருத்ராட்ச மாலையுடன் ஆற்றில் தண்ணீர் எடுப்பது போன்ற புகைப்படத்தை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார். போட்டிருப்பது சீதா வேஷம் என்றாலும் இதில் கிராமராக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இராமனை தேடும் சீதா
