கண்ணாடி புடவையில் கண் கூச வைத்த சமந்தா.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

சமந்தா இப்போது மீண்டும் பழைய உத்வேகத்துடன் கம்பேக் கொடுத்துள்ளார். பொதுவாக நடிகைகள் பட வாய்ப்புக்காக தான் போட்டோ ஷுட் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள். ஒரு பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே சமந்தா ரசிகர்களுக்காக போட்டோ ஷுட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அரிய வகை நோய் ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அதுமட்டுமின்றி அவரது உடலும் மெலிந்து காணப்பட்டது. இப்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ள சமந்தா தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது என போஸ்டர் வெளியாகி இருந்தது. மேலும் விரைவில் அவருடைய சகுந்தலம் படமும் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் பழையபடி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக சமந்தா இருந்து வருகிறார். தன்னுடைய படத்திற்கான போஸ்டரையும் வெளியிட்டு வந்தார்.

இப்போது புடவையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கண்ணாடி போல் இருக்கும் அந்த புடவையில் சமந்தா கொள்ளை அழகுடன் உள்ளார். இதன் மூலம் சமந்தா திரும்ப வந்துட்டேன் என ரசிகர்களுக்கு சூசகமாக சொல்லி உள்ளார்.

சைடு போஸில் கிரங்கடித்த சமந்தா

samantha

கண்ணாடி புடவையில் கண் கூச வைத்த சமந்தா

samantha-cinemapettai

மேலும் சமந்தாவின் இந்த கண்கூச வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி சமந்தா இப்போது பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். ஆகையால் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக சமந்தாவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் வெளியாக இருக்கிறது.

கவர்ச்சி காடாக மாறிய சமந்தா

samantha-cinemapettai