நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் பிரபுதேவாவின் மகன்.. வெளிநாட்டில் இருந்து வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா தற்போது தன்னுடைய மகனுடன் வெளிநாட்டில் வெக்கேஷனில் இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இந்த புகைப்படத்தில் பிரபுதேவாவின் மகன் ரிஷி ராகவேந்திர தேவா அவரையே மிஞ்சும் அளவுக்கு நெடுநெடுவென வளர்ந்து நிற்கிறார். அவரை பார்க்கும் போது அச்சு அசல் பிரபு தேவா காதலன் படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தந்தையை உரித்து வைத்து இருக்கிறார். பிரபல நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் ஆனா பிரபுதேவா அவருடைய நடிப்புத் திறமைக்காகவே அவரை ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என்று அழைக்கிறார்கள்.

இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ள பிரபுதேவா பல வெற்றி படங்களை இயக்கியும் தயாரித்தும் ஹிட் கொடுத்திருக்கிறார். இவர் 1995 ஆம் ஆண்டு ராம்லதா என்பவரை திருமணம் செய்து கொண்டு, இவருக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதி தேவா போன்ற மகன்கள் உள்ளனர். அதில் பிரபு தேவாவின் மூத்த செல்ல மகனான விஷால் தனது 12-வது வயதில் புற்றுநோய் காரணமாக 2008ல் உயிரிழந்தார்.

அதன் பின்னர் பிரபுதேவாவும் நயன்தாராவும் உருக உருக காதலித்தனர். ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்காமல் பிரித்து விட்டனர். மேலும் பிரபுதேவா நயன்தாராவின் பிரச்சனையால் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, அதன் பின் தனியாக வாழ்ந்து வந்த அவர் இப்போது பெண் பிசியோதெரபி ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரபுதேவாவையே மிஞ்சி வளர்ந்து நிற்கும் வாரிசு

prabhu-deva--son-cinemapettai
prabhu-deva–son-cinemapettai

இருப்பினும் பிரபுதேவா தன்னுடைய மகன்களுடன் நண்பர் போலவே ஜாலியாக பழகக் கூடியவர். மனைவியை விவாகரத்து செய்தாலும் தன்னுடைய மகன்களுடன் அதிக நேரம் செலவிடுவார். அதிலும் இப்போது பிரபுதேவாவின் இரண்டாவது மகன் ரிஷி அவருடைய முதுகில் தொங்குவது போல் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் பிரபுதேவாவின் மகன்

prabhu-deva--son-2-cinemapettai
prabhu-deva–son-2-cinemapettai

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது தந்தை- மகன் என்ற எண்ணம் வரவில்லை. ஏதோ நண்பர்கள் ஜாலி பண்ணுவது போலவே தெரிகிறது. விரைவில் பிரபுதேவாவின் மகன் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகவோ அல்லது நடிகராகவோ என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

அச்சு அசல் பிரபுதேவாவையே உரித்து வைத்திருக்கும் அவருடைய மகன்

prabhu-deva--son-3-cinemapettai
prabhu-deva–son-3-cinemapettai