செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பொங்கல் என்றாலே ஒரு ஹிட் பார்சல்.. விஜய் இதுவரை அந்த நாளில் செய்த தில்லாலங்கடி வேலை

பெரும்பாலும் டாப் நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களை குறி வைத்து தான் ரிலீஸ் ஆகும். அந்த வகையில் தளபதி விஜய்க்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான படங்கள் அதிக அளவு கை கொடுத்துள்ளது. அதனால்தான் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு படமும் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு முன்னதாக பொங்கலன்று ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த விஜயின் படங்களை பார்க்கலாம்.

பிரண்ட்ஸ் : விஜய், சூர்யா, தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பிரண்ட்ஸ். இப்படத்தில் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் சமீபத்தில் வேற லெவலில் ட்ரெண்டானது. பிரண்ட்ஸ் படம் 2001 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் அன்று வெளியானது.

வசீகரா : கடந்த 2003 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி வெளியான படம் வசீகரா. செல்வபாரதி இயக்கத்தில் விஜய், சினேகா மற்றும் பலரும் நடித்துள்ள்னர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தந்தது.

Also read:விஜய்யின் சந்தோஷத்துக்கு ஆப்பு வைத்த வம்சி.. மருத்துவமனையிலிருந்து வந்தவுடனேயே செய்த வேலை

திருப்பாச்சி : பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. இந்தப் படம் அண்ணன், தங்கை சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. திருப்பாச்சி படம் 2005 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு வெளியாகி இதற்கு முன் வெளியான கில்லி படத்தின் வசூலை முறியடித்தது.

போக்கிரி : பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் போக்கிரி. இந்தப் படம் விஜய்யின் திருப்பாச்சி படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. போக்கிரி படம் 2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியானது.

Also read:தலைகணத்தில் இருக்கும் விஜய்.. எங்களுக்கு தளபதியே தேவையில்லை என்று முடிவெடுத்த ரசிகர்கள்.!

நண்பன் : ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நண்பன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி நண்பன் படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மாஸ்டர் : கடந்த 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். கோவிட் தொற்று காரணமாக 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் படம் எந்த படமும் வெளியாகாத நிலையில் 2021 தொடக்கத்திலேயே பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாஸ்டர் படம் வெளியாகி வசூல் வேட்டையாடியது.

Also read:ஆஸ்கருக்கு சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த முதல் 5 படங்கள்.. சிவாஜி, கமலால் கிடைத்த கெளரவம்

Trending News