செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பக்கா மெலடி சாங்.. வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் அக நக பாடல் க்ளிம்ப்ஸ்

மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார் , பார்த்திபன் உள்ளிட்டோர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் முதல் பாகம் 500 கோடிக்கு மேல் லாபம் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகம் அதற்கு மேலே வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: அண்ணனும் கைவிட்டாச்சு, நம்பிய படமும் கோவிந்தா.. பொன்னியின் செல்வன் 2 தான் நம்ம அஸ்திவாரம்

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடலின் க்ளிம்ப்ஸை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அக நக பாடல் வரும் மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படம் எந்த வகையான சாங் என ரசிகர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அக நக பாடல் செம மெலடி சாங். இந்த பாடலில் திரிஷா மற்றும் கார்த்திக் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகளாக இருக்கும் என்று, இந்த க்ளிம்ப்ஸ் வெளிப்படுத்துகிறது. மேலும் ஏஆர் ரகுமானின் பக்கா மெலடியாக உருவாகி இருக்கும்.

Also Read: ஐஸ்வர்யா ராயை காதல் சித்திரவதை படுத்திய பிரபல நடிகர்.. ஓவர் டார்ச்சரால் துன்பத்தை அனுபவித்த உலக அழகி

அகநக பாடலின் முழு சாங் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும். இதற்கு முன்பாக குந்தவையாக நடித்திருந்த திரிஷா எப்படி அந்த கதாபாத்திரமாக மாறினார் என்பது தொடர்பான வீடியோவும் வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் எப்படி அந்த கதாபாத்திரமாக மாறினார் என்பது தொடர்பான வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது.

மேலும் தற்போது வெளியாகி இருக்கும் அக நக பாடல் க்ளிம்ப்ஸை பார்த்த பிறகு, முழு பாடலையும் கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகவும் மெகா ஹிட் ஆகும் என நாளுக்கு நாள் இந்த படத்தின் அப்டேட்டுக்கான ரெஸ்பான்ஸை வைத்து பார்த்தாலே தெரிகிறது.

Also Read: பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு எப்போ தெரியுமா.? மணிரத்னம் கொடுக்கும் ட்ரீட்

Trending News