திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகளின் சம்பள லிஸ்ட்.. அதிகமா கல்லா கட்டிய ஆதித்த கரிகாலன்!

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் படுஜோராக நடைபெற்று வரும் வேளையில் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய நிறைய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் நடிகர், நடிகைகளின் சம்பளம் வெளியாகி உள்ளது.

பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா : பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழர் என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை ஆகியோரின் தந்தை தான் இந்த சுந்தர சோழர். மேலும் படகோட்டி பெண் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார். வானதியாக நடிகை ஷோபிதா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் மற்றும் ஷோபிதா இருவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஐஸ்வர்ய லட்சுமி 1.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

Also Read :ஆண்டவரின் பாணியை பின்பற்றும் மணிரத்தினம்.. பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் உறுதி தான்

திரிஷா : பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா. ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழிவர்மனின் சகோதரி தான் குந்தவை. அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அப்படியே பொருந்தி உள்ளார் திரிஷா. மேலும் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக திரிஷாவுக்கு 2.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.

கார்த்தி : பொன்னியின் செல்வன் நாவலில் முக்கிய கதாபாத்திரமாக பார்க்கப்படுபவர் வந்தியத்தேவன். மேலும் ஆதித்ய கரிகாலனின் உத்தரவை ஏற்ற சோழ நாட்டுக்கு செல்வார். இந்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். மேலும் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளதற்காக 5 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.

Also Read :கைதி 2 ரகசியத்தை போட்டு உடைத்த கார்த்தி.. உச்சகட்ட கடுப்பில் லோகேஷ்

ஜெயம் ரவி : பொன்னியின் செல்வன் நாவலின் கதாநாயகன் அருள்மொழிவர்மன். ராஜராஜ சோழன், அருள்மொழி வர்மன், பொன்னியின் செல்வன் என பல பெயர்களால் இவர் அறியப்படுகிறார். இந்த முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இதற்காக இவருக்கு 8 கோடி சம்பளம் பேசப்பட்டது.

ஐஸ்வர்யா ராய் : பொன்னியின் செல்வன் நாவல் உருவாக முக்கியமான காரணமாக இருந்த கதாபாத்திரம் நந்தினி. சோழர் குளத்தை வேரோடு அழிக்க திட்டம் தீட்டும் கதாபாத்திரம் இது. இந்த துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

Also Read :அந்தரங்க கேள்விக்கு வாய்கூசாமல் பதிலளித்த ஐஸ்வர்யா ராய்.. ரகசியத்தை போட்டுடைத்த உலக அழகி

விக்ரம் : பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இவருடைய மரணத்துடன் முதல் பாகம் முடியும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு 12 கோடி சம்பளம் பேசப்பட்டிருந்தது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்களில் அதிக சம்பளம் விக்ரமுக்கு தான் கொடுக்கப்பட்டது.

Trending News