திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வனில் மிரட்டும் 10 கதாபாத்திரங்கள்.. ஒவ்வொருத்தராய் பார்த்து செதுக்கிய மணிரத்தினம்

கிபி 1000 ஆம் ஆண்டுகளில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார்.

இதில் முதல் பாகம் வெற்றிகரமாக ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் செப்டம்பர் 30-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசரை தொடர்ந்து நடிகர் விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய மேக்கிங் வீடியோவும், படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடலின் லிரிகள் வீடியோவும் வெளியாகி சுமார் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இவ்வளவு அதிகமாக இருக்க காரணம் என்னவென்றால் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் முன்னணி நடிகர் நடிகைகளை தேர்வு செய்த படத்தை உருவாக்கியதுதான்.

ஆதித்ய கரிகாலன்: சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் தேர்வு செய்யப்பட்டு அந்த கெட்டப்பில் கம்பீரமாக காட்சியளிக்கிறார் .

சுந்தர சோழர்: 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்ட இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவராக விளங்கியவர் சுந்தர சோழர் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருப்பார்

குந்தவை: சோழ இளவரசியான குந்தவை வல்லவரையன் வந்தியத்தேவனின் பட்டத்து ராணியாக வாழ்ந்தார் இந்த கதாபாத்திரத்தில் திரிஷா அழகான தேவதை போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

நந்தினி:  பொன்னியின் செல்வன் என்று நாவலின் முக்கிய பங்கு வகிக்கும் பெண் எதிரி கதாபாத்திரமான நந்தினி என்ற கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் மிளிர்கிறார்.

அருள்மொழிவர்மன்: இதில் சுந்தர சோழரின் மகனாகவும், ஆதித்த கரிகால சோழன் மற்றும் குந்தவை தேவியின் தம்பியாகவும் அருள்மொழிவர்மன் வருகிறார். இந்த கதாபாத்திரத்திற்கு ஜெயம் ரவி தேர்வு செய்து, அந்த கேரக்டருக்கு ஏற்ப யானைகளின் மொழியை அறிந்தவராகவும் மதம் பிடித்த யானையை கூட கட்டுப்படுத்தும் திறமை வாய்ந்தவராக நடித்திருக்கிறார்.

வல்லவரையன் வந்தியத்தேவன்: சோழப் பேரரசின் கீழ் வல்லவரையர் நாடு  என்ற பகுதியை ஆண்ட சிறுநாட்டு மன்னர் ஆவார். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் சகோதரியான இளவரசி குந்தவை திருமணம் செய்வார். வந்தியத்தேவன் கதாபாத்திரம் தான் பொன்னியின் செல்வன் புதினத்தில் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும்.

முதல் பாகத்தில் இருந்து இறுதி பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகரும். இந்த கேரக்டரில் நடிப்பதற்கு பல நடிகர்கள் ஆசைப்பட்டாலும் கார்த்தி தான் அதற்கு சரியான பொருத்தம் என மணிரத்னம் அவரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

பெரிய பழுவெட்டராயர்: பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர் ஆன இவர் சோழ நாட்டுத் தனாதிகாரியாக சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் இருந்தவர். துறைமுகப்பட்டினங்களில் சுங்க வரியை வசூலிக்கும் பொறுப்பை ஏற்பார் இந்த கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார்.

சின்ன பழுவெட்டராயர்: பழுவூர் எனும் ஊரினை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர்களின் இவரும் ஒருவர். அத்துடன் சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதியாக பார்த்திபன் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கந்தன் மாறன்: இவர் ஒரு சம்புவரையர் குல சிற்றரசர் ஆவார். பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகனான வந்தியத்தேவன் என்பவனின் நண்பனாய் இருந்து பின் சந்தேகத்தால் இருவரும் பிரிந்து விடுவார்கள். இந்த கேரக்டரில் விக்ரம் பிரபு நடித்துள்ளார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி: சோழ பேரரசின் முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றன் ஆவார். மேலும் பழுவூர் இளையராணி நந்தினி தேவியை வளர்த்த சகோதரராகவும் இருப்பார். இந்த கதாபாத்திரத்தில் ஜெயராம் தேர்வு செய்யப்பட்டு நடித்திருப்பார்.

இப்படி பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் முதன்மை கதாபாத்திரம் முதல் சின்ன சின்ன கதாபாத்திரம் வரை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து மணிரத்னம் உருவாக்கியதுதான் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை எகிற  வைத்திருக்கிறது. எனவே வரலாற்றை தெரிந்து கொள்ள துடிப்பவர்கள், பொன்னியின் செல்வன்படத்தை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News