மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றுப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியன் செல்வன். இந்தப் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இருந்தது.
தமிழர் பெருமையை படைச்சாற்றும் பொன்னியின் செல்வன் படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா உடன் கைகோர்த்து மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.
Also Read :பொன்னியின் செல்வனுக்காக கொண்டுவரப்பட்ட தங்க நகைகள்.. பார்த்து பார்த்து செதுக்கிய மணிரத்தினம்
இந்நிலையில் முதல் நாள் தமிழ்நாட்டில் 25.86 கோடி வசூல் செய்த மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. உலகம் முழுவதும் கிட்டதட்ட 80 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இரண்டாவது நாளே 100 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது பொன்னியின் செல்வன் படம்.
இதுவரை தமிழில் உருவான படங்கள் 2 நாளில் 100 கோடியை தாண்டி வசூல் செய்ததில்லை. அந்த சாதனையை பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் நிகழ்த்தியுள்ளார் மணிரத்தினம். அதாவது பொன்னியின் செல்வன் படம் இரண்டு நாள் முடிவில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்துள்ளது.
Also Read :படத்திற்காக குதிரை சவாரி பயிற்சி பெற்ற 4 பிரபலங்கள்.. வந்தியத்தேவனுக்கு டஃப் கொடுத்த 3 நடிகைகள்
மேலும், தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை பார்க்க குடும்பமாக ரசிகர்கள் திரையரங்குக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் மணிரத்தினம் போட்ட பணத்தை பத்தே நாட்களில் எடுத்து விடுவார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதுவும் பொன்னியின் செல்வன் படத்திற்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது கிட்டதட்ட 3 மில்லியன் டாலர்களை இப்போது வரை பொன்னியின் செல்வன் படம் அமெரிக்காவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.