Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வருகிறான் சோழன்.. பொன்னியின் செல்வன் ரிலீஸ்க்கு நாள் குறித்த மணிரத்தினம்

வருகிறான் சோழன்.. பொன்னியின் செல்வன் ரிலீஸ்க்கு நாள் குறித்த மணிரத்தினம்

இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். முதல் பாகம் நிறைவடைந்த நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.’ […]

இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். முதல் பாகம் நிறைவடைந்த நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.’

கல்கி எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் என்னும் வரலாற்று நாவல் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது மணிரத்தினத்தின் நீண்டநாள் திரைக்கனவு. இதனை சிறப்பாக எடுத்து முடிக்க வேண்டும் என்பதற்காக படத்திற்கு ஏற்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுப்பதில் அதிகம் கவனம் செலுத்திய மணிரத்னம் அதற்காக ஹிந்தி, மலையாள, தெலுங்கு மொழி முன்னணி நடிகர்களை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

800 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள பொன்னின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தஞ்சை பெரிய கோயிலில் நடக்கும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில், ஏஆர் ரகுமான் இசையமைத்து, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸாகிறது. இந்தத் தகவலை பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி,  சுந்தரசோழன் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம், நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் என திரையுலக முன்னணி பிரபலங்கள் அவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருக்கின்றனர்.

மேலும் இதில் இவர்கள் மட்டுமல்லாமல் நயன்தாரா, த்ரிஷா, பார்த்திபன், ரகுமான், ஜெயராம், அமலா பால்,  என பல நடிகை நடிகர்கள் நடிக்கின்றனர்.  எனவே சோழர் பரம்பரையை கண்முன் நிறுத்தும் பொன்னியின் செல்வன் படத்தை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.