திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பல திரை பிரபலங்கள் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை லைக்கா உடன் கைகோர்த்து மணிரத்தினம் 500 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருந்தது.

Also Read :சத்தமே இல்லாமல் மணிரத்னம் செய்த தில்லாலங்கடி வேலை.. பொன்னியின் செல்வனில் காக்கப்பட்ட சீக்ரெட்ஸ்

மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் செய்யாத பல சாதனைகளை பொன்னியின் செல்வன் படம் முறியடித்த வருகிறது. வசூலிலும் இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையிலும் தற்போதும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதுவும் ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இரவு நேர வேலையை முடித்துவிட்டு அதிகாலை பொன்னியின் செல்வன் 4:30 மணி ஷோக்கு சென்று வருகிறார்கள். மேலும் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாகி இருந்தது.

Also Read :பாகுபலியை தூக்கி சாப்பிட்ட பொன்னியின் செல்வன்.. திரையுலக கிங் என நிரூபித்த மணிரத்னம்

அப்போதுமே பொன்னியின் செல்வன் படம் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் தற்போது 500 கோடி வசூலை பொன்னியின் செல்வன் படம் நெருங்கியுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை சேர்த்து 125 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இந்த சூழலில் அடுத்த மாதம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது. இதை அறிந்த பொன்னியின் செல்வன் ரசிகர்கள் தற்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படம் ஓடிடியிலும் கண்டிப்பாக நல்ல லாபத்தை பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read :உலகளவில் பொன்னியின் செல்வன் செய்த மொத்த வசூல்.. ரஜினியின் 2.0-வை ஓரங்கட்ட போகும் மணிரத்தினம்

Trending News