விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.. முதல் நாளே கோடிகளை குவித்து வசூல்

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் படம் வெளியாகி மணிரத்தினம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டார் என்றே தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வருகிறது. அதுமட்டுமின்றி முதல் நாளே வசூலில் கோடிகளை குவித்து சாதனை படைத்துள்ளது.

Also Read : மணிரத்னம் மனதில் இடம் பிடித்தாலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நடிகை.. வட போச்சே சோன முத்தா

பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி இருந்தது. மேலும் இந்த படத்தின் ஓடிடி உரிமை, ஆடியோ போன்றவை பல கோடிகளில் விற்கப்பட்டது. இப்போது திரையரங்குகளிலும் வசூல் வேட்டையாடி வருகிறது.

தமிழ்நாட்டில் முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தை பொன்னின் செல்வன் பிடித்துள்ளது. அதாவது அஜித்தின் வலிமை படம் 36.17 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜயின் பீஸ்ட் படம் 26.40 கோடி வசூல் செய்திருந்தது.

Also Read : வந்தியதேவனுக்கு டஃப் கொடுத்த கூல் சுரேஷ்.. பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தை போடு

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 20.61 கோடி வசூல் செய்து மூன்றாம் இடத்தை பிடித்த நிலையில் தற்போது விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது பொன்னியின் செல்வன். தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் 26.6 கோடி வசூல் செய்துள்ளது.

இதனால் பொன்னியின் செல்வன் படம் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இன்றிலிருந்து தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் போட்ட பணத்தை விட பல மடங்கு எடுக்க உள்ளார் மணிரத்தினம்.

Also Read : பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கு வெறித்தனமாக காக்க வைத்திருக்கும் மணிரத்தினம்.. செம ட்விஸ்ட்