Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

LCU-வில் இணையும் பிரபாஸ்.. ஓஹோ கதை அப்படி போகுதா

LCU-வில் இணையும் பிரபாஸ்.. ஓஹோ கதை அப்படி போகுதா

பிரபாஸை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்திய பாகுபலி படத்துக்கு பிறகு அவரின் மூன்று படங்கள் சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் தோல்வியை சந்தித்தன. ஆனால் அவரது கடைசி இரண்டு படங்களான சலார் மற்றும் கல்கி 2898 ஆகியவை […]

பிரபாஸை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்திய பாகுபலி படத்துக்கு பிறகு அவரின் மூன்று படங்கள் சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் தோல்வியை சந்தித்தன. ஆனால் அவரது கடைசி இரண்டு படங்களான சலார் மற்றும் கல்கி 2898 ஆகியவை பெரிய வெற்றிப்படங்களாக அமைய, பிரபாஸ் மீண்டும் தயாரிப்பாளர்களின் விருப்பத்துக்குரிய நடிகராக உருமாறினார்.

இதனால் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்திய சினிமாவில் தற்போதைய சூழலில் மற்ற நடிகர்களை விட மொத்தம் ரூ.2000 கோடி பட்ஜெட் கொண்ட ஐந்து திரைப்படங்கள் பிரபாஸ் கைவசம் உள்ளன.

அதுமட்டுமின்றி டாப் லெவெலில் கான் நடிகர்கள் இருந்தாலும், வசூலில் அவர்களை மிஞ்சியது பிரபாஸ் தான். அதிகமான 1000 கோடி வசூல் கொடுத்தவரும் இவர் தான். இந்த நிலையில் தற்போது, இவர் கைவசம் ராஜசாப், ஸ்பிரிட், சளார் 2, கல்கி 2 ஆகிய படங்கள் உள்ளன.

லோகேஷ் கனகராஜ்-க்கு கொக்கி போடும் பிரபாஸ்

என்னதான் பிரபாஸ் வசூல் மன்னனாக இருந்தாலும், விமர்சன ரீதியாக பாகுபலிக்கு பிறகு வேறு எந்த படமும் பிரபாஸ்-க்கு கை கொடுக்கவில்லை. அதனால், கதை, மேக்கிங் இரண்டிலும் சிறப்பாக விளங்கும் இயக்குனர்களை தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் முக்கியமான மூன்று இயக்குனர்களுக்கு கொக்கி போட்டுள்ளார் பிரபாஸ். இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பது, இயக்குனர் பிரஷாந்த் வர்மா. இவர் ஹனுமான் படத்தை இயக்கியவர், தமிழகத்தை தவிர மற்ற எல்லா ஸ்டேட்களிலும் வசூல் சாதனை ஹனுமான் படம் செய்தது.

மேலும் ஹிந்தி இயக்குனர், ராஜ்குமார் ஹிரானியையும் தேர்வு செய்து அவர் படத்திலும் நடிக்கவுள்ளார். தமிழ் பக்கம் அவரை திரும்பி பார்க்க வைத்தது லோகி தான். தொடர்ந்து அவருடைய படைப்புகளை பார்த்து இம்ப்ரெஸ் ஆன பிரபாஸ், தற்போது அவருக்கும் தூண்டில் போட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜும் பிரபாஸை வைத்து படம் எடுத்தல் பாண் இந்தியா டைரக்டர் ஆகிவிடுவார். அதனால் அவரும் பச்சை கொடி கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பிரபாஸ் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நடித்தால், அவரும் LCU-வில் வருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.