Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பிரதீப் ரங்கநாதனுக்கு மட்டுமே சூட்டிய மகுடம்.. வீர தீர சூரனால் கூட தொட முடியாத உச்சம்

பிரதீப் ரங்கநாதனுக்கு மட்டுமே சூட்டிய மகுடம்.. வீர தீர சூரனால் கூட தொட முடியாத உச்சம்

அதற்குள் சம்மர் லீவ் முடிந்து பள்ளிகள் திறந்து விட்டது. 2025 இப்பொழுது தான் ஆரம்பித்தது போல் இருந்தது அதற்குள் ஆறாவது மாசத்தை தொட்டு விட்டோம். மீண்டும் புத்தகப் பைகளை தூக்கிக்கொண்டு மாணவர்கள் நடையை கட்ட ஆரம்பித்து விட்டார்கள். விடுமுறை […]

அதற்குள் சம்மர் லீவ் முடிந்து பள்ளிகள் திறந்து விட்டது. 2025 இப்பொழுது தான் ஆரம்பித்தது போல் இருந்தது அதற்குள் ஆறாவது மாசத்தை தொட்டு விட்டோம். மீண்டும் புத்தகப் பைகளை தூக்கிக்கொண்டு மாணவர்கள் நடையை கட்ட ஆரம்பித்து விட்டார்கள். விடுமுறை மாதங்களை குறி வைத்து கடந்த இரண்டு மாதங்களாக நிறைய படங்கள் ரிலீஸ் ஆனது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் வெளியீடாக ஜனவரி மாதத்தில் மதகஜராஜா படம் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய இந்த படம் 50 கோடிகளுக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. குடும்பஸ்தன், விடாமுயற்சி போன்ற படங்களும் வெளிவந்தது.

இந்த இரண்டு படங்களை காட்டிலும் இதே மாதத்தில் ரிலீஸ் ஆன பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் மட்டுமே சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் 150 கோடிகள் வசூலித்து கோலிவுட்டில் மயில் கல்லை எட்டியது. இப்பொழுது வரை அதிக வசூலில் டிராகன் படம் மட்டுமே பெருமை சேர்த்துள்ளது.

அதை போல் மார்ச் மாதத்தில் ஜிவி பிரகாசிற்கு கிங்ஸ்டன், ரியோவிற்கு ஸ்வீட் ஹார்ட் போன்ற படங்கள் ரிலீஸ் ஆனது. ரமலான் பண்டிகைக்கு விக்ரமின் வீரதீர சூரன் படமும் ரிலீஸ் ஆனது. இதில் விக்ரம் படம் மட்டுமே ஓரளவு கை கொடுத்தது. நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியில் இந்த படம் சற்று டல் தான்.

ஏப்ரல் மாதத்தில் அஜித்திற்கு குட் பேட் அட்லி படம் வெளிவந்தது. இந்த படம் வசூல் ரீதியாக சக்க போடு போட்டு 100 கோடிக்கு மேல் லாபம் பார்த்தது. அதைப்போல் மே மாதத்தில் சசிகுமாருக்கு டூரிஸ்ட் பேமிலி, சூரி நடிப்பில் மாமன், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் போன்ற படங்கள் வெளிவந்தது. மொத்தத்தில் 10 படங்களில் பிரதீப் ரங்கநாதனுக்கு மட்டுமே மகுடம் கிடைத்தது.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.