Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நடிச்சா ஹீரோவா தான் நடிப்பேன்.. 100-வது நாள் கொண்டாட்டத்தில் அட்ராசிட்டி பண்ணிய டிராகன்

நடிச்சா ஹீரோவா தான் நடிப்பேன்.. 100-வது நாள் கொண்டாட்டத்தில் அட்ராசிட்டி பண்ணிய டிராகன்

Pradeep Ranganathan: நான் நடிச்சா இனி ஹீரோவா மட்டும் தான் நடிப்பேன் என்று அட்ராசிட்டியை பறக்க விட்டிருக்கிறார் டிராகன் ஹீரோ பிரதீப் ரங்கநாதன். நேற்று அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடித்த டிராகன் படத்தின் 100 வது நாள் […]

Pradeep Ranganathan: நான் நடிச்சா இனி ஹீரோவா மட்டும் தான் நடிப்பேன் என்று அட்ராசிட்டியை பறக்க விட்டிருக்கிறார் டிராகன் ஹீரோ பிரதீப் ரங்கநாதன். நேற்று அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடித்த டிராகன் படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது.

கோமாளி, லவ் டுடே வரிசையில் பிரதீப் ரங்க நாதனுக்கு இது மூன்றாவது தொடர் வெற்றி. இதை இந்த மேடையிலேயே ரொம்பவும் பெருமிதமாக பேசியிருக்கிறார். மேலும் டிராகன் படத்தை பற்றி பேசிய பிரதீப் அஸ்வத் மாரிமுத்து உடன் தன்னுடைய நட்பு பற்றியும் பேசி இருக்கிறார்.

அட்ராசிட்டி பண்ணிய டிராகன்

அஸ்வத் இயக்கத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு பிரதீப்பிடம் கேட்டிருக்கிறார். ஆனால் பிரதீப் ரங்கநாதன் இனி நான் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அவரிடம் சொல்லி இருக்கிறார்.

மீண்டும் டிராகன் கதை எழுதிய பிறகு அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய நண்பனை அதில் ஹீரோவாக்கி இருக்கிறார். மேலும் இந்த படம் பண்ணிக் கொண்டிருக்கும்போதே இது சூப்பர் ஹிட் அடிக்கும் என எங்கள் இருவருக்கும் தெரியும் என்றும் பகிர்ந்திருக்கிறார்.

தொடர் வெற்றி கொடுத்த அதீத தைரியம் பிரதீப்பை மேடையிலேயே இவ்வளவு அசாதாரணமாக பேச வைத்திருக்கிறது என இணையவாசிகள் விமர்சித்து இருக்கிறார்கள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.