புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரசிகர் கேட்ட அந்தரங்க கேள்வி.. சரியான பதிலடி கொடுத்த ப்ரியா பவானி சங்கர்

செய்தி தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பிறகு மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது திருச்சிற்றம்பலம், பொம்மை, இந்தியன் 2, பத்துத்தல, யானை என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர். மேலும் தெலுங்கில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு வெப்சீரிஸ்லும் நடித்து வருகிறார். இதை விக்ரம் குமார் இயக்குகிறார்.

இந்நிலையில் தற்போது உள்ள நடிகைகள் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதால் சமூக வலைதளங்களில் தங்கள் அன்றாட நிகழ்வுகளை புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர். இதனாலேயே தற்போது இவர்களுக்கு ஏராளமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இதனால் அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் லைவில் வந்த ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். அவ்வாறு பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தவந்தார். அதில் ஒருவர் உங்களது உள்ளாடை சைஸ் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கப் பிரியா பவானி சங்கர் என்னுடைய பிரா சைஸ் 34D ப்ரோ. மார்பகங்களை நான் வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்களுடைய வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அது உள்ளது. உங்கள் டீசர்ட் உள்ளே பார்த்தால் அது இருக்கும் என தரமான பதிலடி கொடுத்துள்ளார் பிரியா.

தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நடிகைகளை கடுப்பேற்றும் படியான கேள்விகளை சிலர் இவ்வாறு தொடர்ந்து கேட்டு வருகின்றனர். பிரியா பவானி சங்கர் போல் மற்ற நடிகைகளும் சரியான பதிலடி கொடுத்தால் இவர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News