சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான ப்ரியா பவானி சங்கர் தற்போது பெரிய திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் வகையில் தற்போது இவர் கை நிறைய திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.
அதிலும் சிம்புவுடன் இவர் இணைந்து நடித்துள்ள பத்து தல, கமலுடன் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து அவருக்கு இப்போது நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் தன்னை தேடி வரும் வாய்ப்புகள் அனைத்தும் இரண்டாவது ஹீரோயின் கேரக்டர்களாகவே இருப்பதால் ப்ரியா பவானி சங்கர் சற்று கவலையில் இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளமும் குறைவாகவே கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
இதனால் யோசித்த அவர் தற்போது ஒரு அதிரடியில் இறங்கி இருக்கிறார். அதாவது இதுவரை அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த பிரியா பவானி சங்கர் இனிமேல் கவர்ச்சி களத்தில் குதிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம். ஏனென்றால் தற்போது பெரிய திரைக்கு வரும் சீரியல் நடிகைகள் பலரும் தங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர்.
Also read: ஒன்றரை வருஷமா சைட் அடித்த ப்ரியா பவானி சங்கர்.. கொஞ்சம் கூட மதிக்காத நபர்
இப்படி போட்டிகள் அதிகமாகி கொண்டே இருப்பதால் தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதன் முதற்கட்டமாக அவர் இப்போது பாத் டப்பில் அமர்ந்தபடி இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அதில் அவர் அரைகுறை ஆடையில் இருக்கவில்லை.
பாத் டப்பில் பிரியா பவானி சங்கர்

புடவையில் இருந்தபடியே தான் அவர் பாத் டப்பில் அமர்ந்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த டிரஸ் கொஞ்சம் கூட செட் ஆகல என்று கூறுகின்றனர். ஏனென்றால் இப்போது பாத் டப்பில் அமர்ந்தபடி போட்டோ வெளியிடுவது தான் ட்ரெண்டாக இருக்கிறது. ஆனால் கவர்ச்சியில் குதிக்க தயாரான பிரியா பவானி சங்கர் இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டுப்பதை பார்த்து ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
Also read: என்ன நடிச்சு என்ன பிரயோஜனம்.. பயங்கர அப்செட்டில் இருக்கும் ப்ரியா பவானி சங்கர்