Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இது என்னப்பா ஏஎல் விஜய்க்கு வந்த சோதனை.. கோடியில் கொட்டிக் கொடுத்தும் சிக்கலில் மாட்டிய ஹீரோயின்

இது என்னப்பா ஏஎல் விஜய்க்கு வந்த சோதனை.. கோடியில் கொட்டிக் கொடுத்தும் சிக்கலில் மாட்டிய ஹீரோயின்

AL Vijay : அஜித்தின் கிரீடம் படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏஎல் விஜய். மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற ஹிட் படங்களை ஏஎல் விஜய் கொடுத்திருக்கிறார். இப்போது ஹீரோயின் சப்ஜெக்ட் உள்ள ஒரு கதையை எடுத்து வருகிறார். […]

AL Vijay : அஜித்தின் கிரீடம் படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏஎல் விஜய். மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா போன்ற ஹிட் படங்களை ஏஎல் விஜய் கொடுத்திருக்கிறார்.

இப்போது ஹீரோயின் சப்ஜெக்ட் உள்ள ஒரு கதையை எடுத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியால் முதலுக்கே மோசமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர் வேறு ஒரு வேலையில் மிகவும் பிசியாக இருக்கிறார்.

ஆகையால் எவ்வளவு கோடி சம்பளம் கொடுத்தாலும் இப்போதைக்கு இந்த படத்தில் நடிக்க முடியாது என ஸ்ட்ரிட்டாக சொல்லிவிட்டாராம். இப்போது படப்பிடிப்பு மிகவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

மீண்டும் ஏஎல் விஜய் படத்தில் கங்கனா

ஏஎல் விஜய்யின் தலைவி படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். இப்போது மீண்டும் இதே கூட்டணியில் தான் ஒரு படம் உருவாகி வருகிறது. ஆனால் இப்போது கங்கனா அரசியலில் பிசியாக இருக்கிறார்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் மண்டி என்ற தொகுதியில் பிஜேபி சார்பில் கங்கனா களமிறங்கியுள்ளார். இப்போது இதற்கான பிரச்சாரத்தில் தான் கங்கனா இருந்து வருகிறார். சர்ச்சையான விஷயங்களைப் பேசி கங்கனா பலமுறை சிக்கல்களை சந்தித்து இருக்கிறார்.

சமீபத்தில் கூட தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் வாடேட்டீவார் கங்கனா ரனாவத் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கூறியிருந்தார். நான் எந்த வகையான சிவப்பு இறைச்சியும் சாப்பிட்டதில்லை என்று கங்கனாவும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறு அரசியல் களம் பரபரப்பாக சென்று கொண்டு இருப்பதால் படப்பிடிப்பில் கங்கனா கலந்து கொள்ளவில்லை. அவருக்கு 7 கோடி சம்பளம் கொடுத்தும் படப்பிடிப்புக்கு வர மறுத்துவிட்டாராம். அரசியலிலும் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.