வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

உயர்ந்த ஜாதி என்று ஒதுக்கப்பட்ட நடிகை.. மட்டமாக நடந்து கொண்ட பா ரஞ்சித்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. வருடங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் மனதில் அவருக்கான இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதனால்தான் அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் அவர்களால் கொண்டாடப்பட்டு வசூல் சாதனை புரிந்து வருகிறது.

அந்த வகையில் அவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். அதில் அவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் வெளிவந்த காலா திரைப்படத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஈஸ்வரி ராவ் நடித்திருப்பார்.

அவர் தமிழில் சிம்மராசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்து போனதால் ஒரு சில சீரியல்களிலும் அவர் நடித்தார். அதன்பிறகு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவருக்கு ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் உண்மையில் அந்த கேரக்டருக்கு முதல் சாய்ஸாக இருந்தவர் நடிகை சுகன்யா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான சுகன்யா தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பிறகு வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவருக்கு இந்த காலா பட வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அவர் பிராமின் என்ற ஒரே காரணத்துக்காக இயக்குனர் ரஞ்சித் அவரை அந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை. அதன்பிறகு நடிக்க வந்தவர்தான் ஈஸ்வரி ராவ். சுகன்யா உயர்ந்த ஜாதி என்ற காரணத்தினால்தான் ரஞ்சித் அவரை நடிக்க வைக்க மறுத்து விட்டதாக பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

Trending News